ETV Bharat / state

ஆடுதுறை நெல் ஆராய்ச்சி மையத்திற்கு விசிட் அடித்த மாணவ-மாணவிகள்

தஞ்சாவூர்: விவசாயத்துறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தொழில்நுட்பங்கள் குறித்து அறிந்து கொள்ள  ஈச்சங்கோட்டை வேளாண்மை கல்லூரி மாணவர்கள் ஆடுதுறை நெல் ஆராய்ச்சி மையத்திற்கு வந்தனர்.

Technology introduced in agriculture
Technology introduced in agriculture
author img

By

Published : Dec 17, 2019, 10:27 AM IST

டெல்டா மாவட்டங்களில் சுமார் இரண்டு லட்சம் ஏக்கரில் சம்பா, தாளடி, நேரடி நெல் சாகுபடி எனப் பயிரிடப்பட்டு வருகிறது. வயல்களில் அதிகளவில் தண்ணீர் தேங்குதல், பல்வேறு பூச்சிகள் தாக்குதல், ஊடு களை எனப் பல்வேறு பிரச்னைகளுக்கு இடையே மகசூல் எடுப்பதில் விவசாயிகள் கடும் சவாலை எதிர் கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் பூச்சித் தாக்குதல், விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்னைகள், விவசாயத்துறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தொழில் நுட்பங்கள் குறித்து அறிந்து கொள்ள ஈச்சங்கோட்டை வேளாண்மை கல்லூரி இளங்கலை இரண்டாம் ஆண்டு மாணவ - மாணவிகள் 80 பேர் ஆடுதுறை நெல் ஆராய்ச்சி மையத்திற்கு வந்தனர்.

ஆடுதுறை நெல் ஆராய்ச்சி மைய இயக்குநர் முனைவர்.அம்பேத்கர்

அவர்களுக்கு மையத்தின் இயக்குநர் முனைவர் அம்பேத்கர் நெற்பயிரில் ஏற்படும் நோய், பூச்சித் தாக்குதல்கள் அவற்றிலிருந்து எவ்வாறு நெற்பயிரைக் காப்பது, விவசாயத்தில் இருக்கும் புதிய தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கமளித்தார்.

அதன் பின் பேசிய மாணவிகள், இதுபோன்று கள ஆய்வு மேற்கொண்டது தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பதாகவும், விவசாயத்தில் ஏற்பட்டுள்ள தொழில் நுட்பங்களை விவசாயிகள் முறையாகப் பயன்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

பிரதிக்ஷா- வேளாண் கல்லூரி மாணவி

இதையும் படிங்க:

இரண்டாயிரம் ஏக்கர் நெற்பயிர்களில் ஆனை கொம்பன் நோய் தாக்குதல் - விவசாயிகள் வேதனை

Intro:தஞ்சாவூர் டிச 16

பட்டம் தவறி பயிரிடப்படும் நெற்பயிர்களை குறிப்பிட்ட ஈக்கள் தாக்கி விவசாயிகளுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்துகின்றன. இது குறித்து வேளாண்மைக் கல்லூரி மாணவர்களுக்கு ஆடுதுறை நெல் ஆராய்ச்சி மைய இளக்குநர் விளக்கினார்Body:

டெல்டா மாவட்டங்களில் சுமார் 2 லட்சம் ஏக்கரில் சம்பா,. தாளடி ,நேரடி நெல் சாகுபடி என பயிரிடப்பட்டு வருகிறது.
வயல்களில் அதிகளவில் தண்ணீர் தேங்குதல், பல்வேறு பூச்சிகள் தாக்குதல், ஊடு களை என பல்வேறு பிரச்சினைகளுக்கு இடையே மகசூல் எடுப்பதில் விவசாயிகள் கடும் சவாலை எதிர் கொண்டு வருகின்றனர்.
பூச்சி தாக்குதல், மற்றும் விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், விவசாயத்துறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தொழில்நுட்பங்கள் குறித்து அறிந்து கொள்ள தஞ்சை அருகே உள்ள ஈச்சங்கோட்டை வேளாண்மை கல்லூரி இளங்கலை 2 ஆம் ஆண்டு மாணவ- மாணவிகள் 80 பேர் ஆடுதுறை நெல் ஆராய்ச்சி மையத்திற்கு வந்தனர்.
அவர்களுக்கு மையத்தின் இயக்குநர் முனைவர் அம்பேத்கர் நெற்பயிரில் ஏற்படும் நோய் மற்றும் பூச்சித் தாக்குதல்கள், அவற்றிலிருந்து எவ்வாறு நெற்பயிரை காப்பது விவசாயத்தில் புதிய தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கமளித்தார்.
இது போன்று கள ஆய்வு மேற்கொண்டது தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பதாகவும் விவசாயத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பங்களை விவசாயிகள் முறையாக பயன்படுத்த வேண்டும் என்றும் வேளாண் கல்லூரி மாணவிகள் தெரிவித்தனர்.

BYTE- 1) பிரதிக்க்ஷா- வேளாண் கல்லூரி இளங்கலை 2 ஆம் ஆண்டு மாணவி

தற்போது உள்ள பருவ கால நிலையில் ஆனைக் கொம்பன் என்ற ஈ நெல் வளரும் பருவத்தBYTE- 1) பிரதிக்க்ஷா- வேளாண் கல்லூரி இளங்கலை 2 ஆம் ஆண்டு மாணவி
தற்போது உள்ள பருவ கால நிலையில் ஆனைக் கொம்பன் என்ற ஈ நெல் வளரும் பருவத்தில் தூர்களின் உட்பகுதிக்குச் சென்று, வளர்கின்ற குருத்தை உணவாக உட்கொள்ளும் போது தாக்கப்பட்ட தூர்கள் வெண்மையாகி இலைகள் வளராமல் வெங்காய இலை போன்று குழலாக மாறிவிடும். குழல் போன்ற தூர்களில் மேற்கொண்டு வளர்ச்சி இருக்காது. கதிர்களும் உருவாகாது. இத்தூர்கள் காண்பதற்கு யானைத் தந்தம் போன்று இருப்பதால் நெல் குருத்தை தாக்கும் இந்த வகை ஈக்களுக்கு யானைக் கொம்பன் ஈ என்று பெயரிடப்பட்டுள்ளது.
இதனைத் தடுக்க ஏக்கருக்கு 25 கிலோ பூரியா, மற்றும் பொட்டாஷ் உரங்கள், சாம்பல் சத்து இட வேண்டும் என்று ஆலோசனை கூறுகிறார் ஆடுதுறை நெல் ஆராய்ச்சி மைய இளக்குநர் அம்பேத்கர்.
மேலும், கார்போசல்பான், குளோரோஃபைரிபாஸ், ஃபைப்ரினில், தையமித்தாக்சம் போன்ற திரவ ரசாயனத்தையும் பயன்படுத்தி ஆனைக் கொம்பன் ஈக்களை கட்டுப்படுத்தலாம் என்று விவசாயிகளை அறிவுறுத்துகிறார் மையத்தின் இயக்குநர் அம்பேத்கர்.

BYTE- 2) முனைவர்.அம்பேத்கர்- ஆடுதுறை நெல் ஆராய்ச்சி மைய இயக்குநர்

நெற்பயிர்களை ஆயிரத்து 378 வகையான பூச்சி சிற்றினங்கள் தாக்குவதாகவும், அவற்றில் 100 க்கும் அதிகமான பூச்சியினங்கள் நிலையானதாகவும், 20 முதல் 30 வகையான பூச்சியினங்கள் விவசாயிகளுக்கு பொருளாதார சேதத்தை ஏற்படுத்துவதாகவும் மைய இயக்குநர் அம்பேத்கர் தெரிவித்தார்.

மேலும் நோய்கள் தாக்காத போது நெற்பயிர்களில் பூச்சி மருந்து அடிப்பது தவறு என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதனைத் தடுக்க விவசாயிகளுக்கு உரிய அறிவுரைகள் வழங்க தங்கள் மையத்தில் நெல் ஆராய்ச்சி விஞ்ஞானிகள் எப்போதும் தயாராக இருப்பதாகவும் இயக்குநர் முனைவர் அம்பேத்கர் தெரிவித்தார்.
Conclusion:Tanjore sudhakaran 9976644011
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.