திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் சாரங்கபாணி (30). இவர், ஒரத்தநாடு அருகேயுள்ள அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றிவந்தார்.
இவர் மாணவிகளிடம் ஒழுங்கீனமாக நடந்து கொள்வதாக, பெற்றோர்கள் பள்ளியில் புகார் அளித்துள்ளனர். இதனால் அவர், திருக்காட்டுப்பள்ளி அருகேயுள்ள இளங்காடு அரசுப் பள்ளிக்கு மாற்றப்பட்டார்.
இந்நிலையில், அவர் திருவோணம் பள்ளிக்கு மீண்டும் மாறுதல் வாங்கிக்கொண்டு பணிக்கு திரும்பியுள்ளார். இதனையறிந்த மாணவிகளின் பெற்றோர், பள்ளியின் முன்பு திரண்டு போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து அப்பள்ளியின் மாணவி ஒருவர், ஆசிரியர் சாரங்கபாணி மாணவிகளை தனியாக அழைத்து செல்போனில் ஆபாச படத்தைக் காட்டியதாக திருவோணம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
உடனடியாக இந்த வழக்கு பட்டுக்கோட்டை மகளிர் காவல் துறைக்கு மாற்றப்பட்டு சாரங்கபாணியை போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க:
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர்; போக்சோ சட்டத்தில் சிறையில் அடைப்பு