ETV Bharat / state

அம்பேத்கர் படிப்பகம் அமைப்பதற்கு எதிர்ப்பு - தாக்கப்பட்ட இளைஞர்கள்!

தஞ்சாவூர்: அம்பேத்கர் படிப்பகம் அமைத்ததற்கு இரண்டு இளைஞர்கள் தாக்கப்பட்டுள்ளனர்.

Tanjore youngster attacked for open a study centre

author img

By

Published : Jan 12, 2020, 1:23 PM IST

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் அருகே குறிச்சிமலை புதுத்தெருவில் வசிக்கும் பட்டியலின இளைஞர்கள் அப்பகுதியில் அம்பேத்கர் படிப்பகம் அமைப்பதற்காக கடந்த 7ஆம் தேதி, அதே பகுதியில் கொட்டகை அமைத்து வந்தனர். அப்பகுதியில் ஒரு சில இடங்களுக்கு திருமங்கலக்குடியைச் சேர்ந்த பாபு என்கிற செந்தூர்பாண்டி, நிர்வாகியாக இருந்து வருவதாகக் கூறப்படுகிறது. இதில் பாபு நிர்வகிக்கும் நிலப்பகுதிகளில் குறிச்சிமலை இளைஞர்கள் படிப்பகத்தை அமைத்துள்ளனர்.

இளைஞர்களை தாக்கிய பாபு!
இளைஞர்களைத் தாக்கிய பாபு!

இதனையடுத்து பாபுவின் ஆதரவாளர்கள் சிலர் அம்பேத்கர் படிப்பகத்தில் செல்போன் கேமரா மூலம் வீடியோ பதிவு செய்து அவரிடம் கொடுத்துள்ளனர். இதில் ஆத்திரமடைந்த பாபு அம்பேத்கர் படிப்பகம் அமைத்த புது தெருவைச் சேர்ந்த சுரேஷ் (22), பார்த்திபன்(24) ஆகியோரைத் துப்பாக்கி முனையில் மிரட்டி, முட்டிப் போட வைத்துள்ளார். பின்னர் இருவரையும் சரமாரியாகத் தாக்கியதில் இருவரும் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் திருவிடைமருதூர் காவல் நிலையத்துக்கு முன்பு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகி வெண்மணி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாபு என்கிற செந்தூர்பாண்டியைக் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கண்டன முழக்கம் எழுப்பினார்கள்.

படிப்பகம் அமைப்பதற்கு எதிர்ப்பு: தாக்கப்பட்ட இளைஞர்கள்!

பின்னர் கிராம மக்கள் கோரிக்கையை ஏற்ற திருவிடைமருதூர் காவல் துறை ஆய்வாளர் விஜயா, செந்தூர் பாண்டி மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க...பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்து - 3 பேர் உயிரிழப்பு

Intro:தஞ்சாவூர் ஜன 12

அம்பேத்கர் படிப்பகம் அமைப்பதற்கு ஏதிர்ப்பு
Body:திருவிடைமருதூர் அருகே குறிச்சிமலை புது தெருவில் வசிக்கும் தலித் இளைஞர்கள் அப்பகுதியில் அம்பேத்கர் படிப்பகம் அமைப்பதற்காக
கடந்த 7 ந்தேதி
அதே பகுதியில் கொட்டகை அமைத்து வந்தனர்.
அப்பகுதியில் ஒரு
சில இடங்கள் திருமங்கலக்குடியைச் சேர்ந்த ஆதிகேசவன் மகன் பாபு என்கிற செந்தூரபாண்டி பவர் ஏஜெண்டாக இருந்து வருவதாக கூறப்படுகிறது.
அம்பேத்கர் படிப்பகத்தில் செல்போன் கேமரா மூலம் வீடியோ பதிவு செய்து பாபுவின் ஆட்கள் கொடுத்துள்ளனர்.
இதில் ஆத்திரமடைந்த பாபு குறிச்சிமலை புது தெருவைச் சேர்ந்த சுரேஷ் வயது 22 பார்த்திபன் வயது 24 ஆகியோரை துப்பாக்கி முனையில் இளைஞரை முட்டி போட வைத்ததாக கூறப்படுகிறது.
அதன்பின்பு இருவரையும் தாக்கியதில் பலத்த காயமடைந்த சுரேஷ் மற்றும் பார்த்திபன் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் பாபுவை கைது செய்ய வலியுறுத்தி திருவிடைமருதூர் காவல் நிலையத்துக்கு முன்பு விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகி வெண்மணி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாபு என்கிற செந்தூர்பாண்டினை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கண்டன முழக்கம் எழுப்பினார்கள்.
பின்னர் கிராம மக்கள் கோரிக்கை ஏற்று திருவிடைமருதூர் காவல்துறை ஆய்வாளர் விஜயா செந்தூரப் பாண்டியன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனால் நூற்றுக்கும் மேற்பட்டோர் காவல் நிலையத்திற்குள் சென்ற கிராம மக்கள் கலைந்து சென்றனர்.Conclusion:Sudhakaran 9976644011

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.