தஞ்சாவூர்: பேராவூரணியில் நலிவடைந்த மூன்று தம்பதிகளுக்கு பேராவூரணி பகுதி சமூக அமைப்பாளர்கள் ஒன்று சேர்ந்து, மூன்று ஜோடிகளுக்கு தங்கத்தாலி மற்றும் கட்டில், பீரோ உள்ளிட்ட சீர்வரிசைப் பொருள்களை தலா ஒரு லட்சம் ரூபாய் மதிப்பில் மூன்று ஜோடிகளுக்கும் சீர்வரிசைப் பொருட்களை ஊர்வலமாக எடுத்துச்சென்று வழங்கி, அவர்களுக்கு திருமணத்தை நடத்தி வைத்தனர்.
மேலும் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பில் திருமணத்திற்கு வந்திருந்த புதுமணத் தம்பதிகளின் உறவினர்கள், சமூக ஆர்வலர்கள் என 500க்கும் மேற்பட்டோருக்கு அறுசுவை மதிய உணவு அளித்தனர். இதில் கலந்துகொண்ட பேராவூரணி தாசில்தார் தம்பதிகளுக்கு திருக்குறள் பரிசளித்தார்.
பேராவூரணி பெண் காவல் இன்ஸ்பெக்டர் செல்வி, மணமக்களை வாழ்த்திப் பேசி நடிகர் ரஜினிகாந்த் நடித்த பணக்காரன் படத்தில் இடம்பெற்ற, "நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும்தான் பேரு வெளங்க இங்கு வாழணும்" என்ற பாடலைப் பாடி வாழ்த்தினார். இதையடுத்து கூட்டத்தில் இருந்த மணமக்களின் உறவினர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். இந்த காட்சி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க:வேலூரில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோயிலில் கோ பூஜை!