தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே உள்ள மணிக்கிரான் தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் இன்று (ஜூன் 8) காலை தனக்குச் சொந்தமான வயலில் விவசாய வேலை பார்க்க வரப்பில் நடந்து சென்றுள்ளார்.
அப்போது அங்கு மின்சார கம்பி அறுந்து கீழே செடிகளுக்கு இடையே கிடந்துள்ளது. அது தெரியாமல் வரப்பில் சென்ற ஆறுமுகம், கம்பியின் மீது கால் வைக்கவே, மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதை அறிந்த அவரது உறவினர்கள், ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் சம்பவ இடத்திற்குச் சென்று திருவோணம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர், ஆறுமுகத்தின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்தனர்.
ஆறுமுகத்திற்கு மனைவி, ஒரு பெண் குழந்தை, ஒரு ஆண் குழந்தை என்ற குடும்பம் உள்ளது. மேலும், மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் திருவோணம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.