தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கம் சார்பில் பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்தைக் கண்டித்து கும்பகோணம் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் அலுவலகம் முன்பு டிராக்டரை கயிறு கட்டி இழுக்கும் நூதன ஆர்பாட்டம் நடைபெற்றது.
முன்னதாக, பெட்ரோல் கேன்களை தலையில் வைத்தவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், பின்பு நிலத்தை உழப் பயன்படுத்தும் டிராக்டரை கயிறு கட்டி இழுத்தனர்.
உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் வீழ்ச்சியடைந்துவரும் நிலையில், இந்திய அரசு மட்டும் பெட்ரோல் விலையை நாளுக்கு நாள் உயர்த்தி வருகிறது. கலால் வரி, சுங்க வரி போன்ற வரிகளையும் தொடர்ந்து அதிகப்படுத்தி வருகிறது என ஆர்பாட்டத்தின் போது அவர்கள் வேதனை தெரிவித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்க ஒருங்கிணைப்பாளர் சுவாமிநாதன் தலைமையில் 60க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.