அமிர்தம் ரெஜி என்பவரது நிறுவனமான ஆர்கானிக் இந்தியா பிரைவேட் லிமிடெட் எனும் நிறுவனம், தலைசிறந்த ஆர்கானிக் முறையில் விவசாயம் செய்யப்பட்ட காய்கறிகள், பழவகைகள், உலர்ந்த உணவுப் பொருட்கள், தானிய வகைகள் ஆகியவற்றை உலக அளவில் வியாபாரம் செய்து வருகிறது.
இவரின் மற்றொரு நிறுவனமான அமிர்தம் ஜெம்ஸ், மண்ணின் தன்மைக் கெடாமல், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத, நச்சுத்தன்மையற்ற வேதிப்பொருட்களைப் பயன்படுத்தி, இயற்கை முறையில் விவசாயம் மேற்கொண்டுவருகிறது. மலேசியாவில் உற்பத்தி செய்யப்படும் பாமாயில் உலக அளவில் மக்களால் விரும்பிப் பயன்படுத்தப்பட்டு வரப்படுகிற சூழலில், இதனை இந்தியாவிற்கு விநியோகிப்பதற்கான உரிமையை மலேசிய அரசு அமிர்தம் ஜெம்ஸ் நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது.
இதையடுத்து இந்நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் அமிர்தம் ரெஜி, முதற்கட்டமாக பக்கவிளைவற்ற மலேசியப் பாமாயிலை கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களில் சந்தைப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். இதனையொட்டி அமிர்தம் ரெஜி, தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டைப் பகுதியிலுள்ள விவசாயிகளை சந்தித்து, ஆர்கானிக் முறையில் விவசாயம் செய்வது பற்றிய முறைகளை விளக்கி, விவசாயிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இதன்மூலம், இப்பகுதியில் ஆர்கானிக் முறையில் விவசாயம் செய்யும் பலர் உருவாகி, பக்கவிளைவுகள் இல்லாத உணவுகளை மக்களுக்கு வழங்கி, மனித இனத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் ஈடிவி பாரத் செய்திகளுக்கு அளித்தப் பேட்டியில் தெரிவித்தார்.
முன்னதாக அகில இந்திய உழவர் உலகப்பேரவை நிறுவனர் தட்சிணாமூர்த்தியும், பேரவை நிர்வாகிகளும், தொழிலதிபர் அமிர்தம் ரெஜியை சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:
புதிய மோட்டார் வாகன சட்டம்: லாரி கூண்டு கட்டும் தொழிலில் லட்சக்கணக்கானோர் வேலையிழக்கும் அபாயம்!