ETV Bharat / state

நெருங்கும் குறுவை சாகுபடி; டெல்டா மாவட்டங்களில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு - tamil nadu cm mk stalin inspection

நடப்பாண்டில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து நீர் திறக்கப்பட உள்ள நிலையில், நடந்து வந்த துர்வாரும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jun 9, 2023, 5:55 PM IST

Updated : Jun 9, 2023, 7:38 PM IST

டெல்டா மாவட்டங்களில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு

தஞ்சாவூர்: திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலூர், தஞ்சாவூர் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் 'குறுவை சாகுபடி'-க்காக வரும் 12ஆம் தேதி மேட்டூர் அணையில் (Mettur Dam) இருந்து தண்ணீரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். கடைமடை வரை தண்ணீர் சென்று சேர்வதற்காக ஆண்டுதோறும் மேட்டூர் அணை திறப்பதற்கு முன்னதாக அப்பகுதியில் உள்ள ஆறுகள், ஏரிகள், வாய்க்கால்கள் தூர்வாரப்படும்.

அதைபோல், இந்த ஆண்டு காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள ஆறுகள், வாய்க்கால்கள் உள்ளிட்டவைகளை தூர்வாரும் பணிகள் 4773.13 கி.மீ. நீளத்திற்கு ரூ.90 கோடி மதிப்பில் மேற்க்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் 189 பணிகள் 1068.45 கி.மீ. நீளத்திற்கு ரூ.20 கோடியே 45 லட்சத்து 51 ஆயிரம் மதிப்பில் நடந்து வருகிறது.

இந்தப் பணிகளை கண்காணிக்க ஏற்கனவே, மாவட்டந்தோறும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இந்த ஆண்டு 5 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி மேற்கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், அதற்கானப் பணிகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில், டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணி குறித்து நேரடியாக ஆய்வு செய்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்றிரவு தஞ்சாவூருக்கு வந்தடைந்தார்.

இதனைத்தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 9) காலையில் முதலில் தஞ்சாவூரை அடுத்த வல்லம் ஆலக்குடி முதலைமுத்து வாரியில் நடந்து வரும் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்தார். தொடர்ந்து, ரூ.40 லட்சம் மதிப்பில் நடந்து வரும் தூர்வாரும் பணிகள் முடிந்துள்ள விவரங்களை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் எடுத்துரைத்தார். முன்னதாக, டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகள் முடிவடைந்த விவரங்கள் அடங்கிய புகைப்பட கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். பின்னர், அங்கு கூடியிருந்த விவசாயிகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பல்வேறு கோரிக்கைகளை மனுக்களாக அளித்தனர். அப்போது, கடந்த ஆண்டு கடைமடை வரை தண்ணீர் சென்றதைப் போல், இந்த ஆண்டும் கடைமடை வரை தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து புறப்பட்டு பூதலூர் தாலுகா விண்ணமங்கலத்துக்கு சென்றார். இதைத்தொடர்ந்து, அங்கு ரூ.41 லட்சம் மதிப்பில் தூர்வாரப்பட்டுள்ள சி மற்றும் டி பிரிவு வாய்க்கால்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். இதையடுத்து, தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆய்வை முடித்து கொண்டு திருச்சி மாவட்டம், புள்ளம்பாடி கூழையாற்றில் நடக்கும் தூர்வாரும் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்ய புறப்பட்டு சென்றார். இந்த ஆய்வின் போது அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அன்பில்மகேஷ் பொய்யாமொழி, ஆட்சியர்கள் தீபக் ஜேக்கப் (தஞ்சாவூர்), பிரதீப்குமார் (திருச்சி) மற்றும் பழநிமாணிக்கம் எம்.பி. உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

இதுகுறித்து விவசாயி ஜீவகுமார் என்பவர் கூறும்போது, 'ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்க உள்ள நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் டெல்டா பகுதிகளில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்வது வரவேற்கத்தக்கது என்றும் அதேபோல், பிரதான ஆறுகள் வாய்க்கால்கள் ஆகியவற்றையும் பார்வையிட வேண்டும் என்றும் அப்போதுதான், கடைமடை வரை தண்ணீர் வந்துசேரும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

இதனிடையே, அங்கிருந்த சிறுமிகளுக்கு சாக்லெட் கொடுத்து மகிழ்ந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பின்னர் அங்கிருந்து தஞ்சாவூர் மாவட்டம், ஆலக்குடி முதலை முத்துவாரியில் முடிவடைந்த தூர்வாரும் பணியினை பார்வையிட்டு முதலமைச்சர் வேனில் புறப்பட்டார். இதைத்தொடர்ந்து, விண்ணமங்கலம் செல்லும் வழியில் அவருக்கு திமுக கட்சி தொண்டர் ஒருவர் தனது இரண்டு குழந்தைகளுடன் நின்று கையசைத்தார். இவர்களை பார்த்த முதலமைச்சர் வாகனத்தை நிறுத்த சொல்லி அவர்களை அருகில் வரவழைத்து, அச்சிறுமிகள் இரண்டுபேருக்கும் கைகொடுத்து சிறுமிகளுக்கு சாக்லெட் கொடுத்து மகிழ்ந்தார்.

இதையும் படிங்க: மின் கட்டண உயர்வு.. மத்திய அரசை துணைக்கு அழைக்கும் திமுக - ஈபிஎஸ் கண்டனம்

Last Updated : Jun 9, 2023, 7:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.