ஆங்கிலேயர் காலத்திலிருந்து பட்டுக்கோட்டை பகுதியில் உள்ள பெரும்பாலான மாணவர்கள் கல்வி கற்பதற்காக பல மைல் தொலைவில் செல்ல வேண்டி இருந்தது.
இதன் ஒரு எடுத்துக்காட்டாக நமது இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் வெங்கட்ராமன் பிறந்த ஊரான ராஜாமடம் பகுதியில் பள்ளிகள் இல்லாததால் முன்னாள் குடியரசுத் தலைவர் பல மைல் தொலைவு சென்று படிக்கக்கூடிய நிலை இருந்து வந்தது.
இதையடுத்து இப்பகுதியில் உள்ள ஏழை மாணவர்கள் கல்வி அறிவு பெற அதிராம்பட்டினம் எஸ்எம்எஸ் ஷேக் ஜலாலுதீன் என்பவர் தனது சொந்த முயற்சியில் காதர்முகைதீன் பள்ளியை நிறுவினார். இதன் மூலம் இப்பகுதியில் உள்ள ஏராளமான ஏழை மாணவர்கள் படித்து அரசு மற்றும் தனியார் துறையில் மிகப்பெரிய அளவில் பணியாற்றிவந்தனர்.
இந்நிலையில் இந்தப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த சந்திப்பில் தற்போது மிகப்பெரிய பதவிகளை வகிக்கக்கூடிய அனைத்து முன்னாள் மாணவர்களும் கலந்துகொண்டு தங்கள் பள்ளிப் பருவத்தில் நடைபெற்ற நெகிழ்ச்சியான அனுபவங்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொண்டனர்.
மேலும் இப்பள்ளி பிளாட்டினம் ஜூபிலி கடந்துவிட்ட நிலையில் பள்ளிக்கு பெருமை சேர்க்கும் விதமாக முன்னாள் மாணவர்கள் இந்தப் பள்ளிகளை மேம்படுத்த நன்கொடைகளையும் வழங்கினர்.
இதையும் படிக்க: அரசுப் பள்ளிக்கு தண்ணீர் தொட்டி அமைத்து கொடுத்த முன்னாள் மாணவர்கள்