புதுக்கோட்டையில் இருந்து அரியலூர் சென்ற திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு திருவையாறு தொகுதியின் கண்டியூரில் சட்டப்பேரவை உறுப்பினரும், மாவட்ட கழக செயலாளருமான துரைசந்திரசேகரன் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது திமுக நிர்வாகிகள், தொண்டர்கள், மகளிர் அணியினர் ஆயிரக்கணக்கில் திரண்டு நின்று மலர்தூவி இன்முகத்துடன் ஸ்டாலினை வரவேற்றனர்.
தொடர்ந்து, நடுக்கடை, திருவையாறு திருமஞ்ன வீதி, தேரடி திடல், விளாங்குடி ஆகிய பகுதியிகளில் வழிநெடுகெலிலும் வரிசையாக நின்று மலர்தூவி உற்சாகமாக வரவேற்றனர். இதற்காக காலை முதலே அவர்கள் சாலையோரத்தில் காத்துக்கிடந்த நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் கார் கண்ணாடியை கூட இறக்காமல் கை அசைத்துவிட்டு நகர்ந்தார்.
கொளுத்தும் வெயிலில் தங்கள் தளபதியைச் சந்திக்க குழந்தைகளுடன் காத்திருந்த திமுக மகளிரணியினருக்கு இது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதை அங்கு நிலவிய சலசலப்பின் மூலமாக அறியமுடிந்தது.
இதையும் படிங்க:திமுகவிற்கு ஆதரவளித்த தேமுதிக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம் - விஜயகாந்த் அறிக்கை!