ETV Bharat / state

கறிக்குழம்பு எங்கே! தந்தையை கத்தியால் குத்திய மகனுக்கு வலைவீச்சு - தஞ்சையில் விபரீதம் - மகனுக்கு வலைவீச்சு

தஞ்சாவூர் அருகே மேல விசலூரில் கறிக்குழம்புக்காக தந்தையை கத்தியால் குத்திவிட்டு தலைமறைவாகிய மகனை போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : May 12, 2023, 4:43 PM IST

Updated : May 12, 2023, 5:31 PM IST

தஞ்சாவூர் அருகே மேல விசலூரில் கறிக்குழம்புக்காக தந்தையை கத்தியால் குத்திய மகன்

தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே மேலவிசலூரில் கறிக்குழம்பைத் தனக்கு இல்லாமல் சாப்பிட்ட தந்தையை ஆத்திரமடைந்த மகன் கத்தியால் குத்திய சம்பவம் நடந்தேறியுள்ளது. இதனால், படுகாயமடைந்த அவரின் முதுகில் கத்தியின் ஒருபகுதி முறிந்து சிக்கிக்கொண்ட சோகமும் நடந்துள்ளது. இதனிடையே, கறிக்குழம்பிற்காக தனது தந்தையை மூர்க்கத்தனமாக கத்தியால் குத்திவிட்டு தலைமறைவாகிய மகனை, போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்.

கும்பகோணம் அருகே நாச்சியார்கோயில் காவல் சரகம் மேலவிசலூர் கிராமம், காந்திநகரில் வசிப்பவர் மோகன்தாஸ்(60). இவரது மகன் இராமச்சந்திரன்(20) திருமணமாகிய நிலையில் தனக்குத் தனி வீடு வேண்டும் என அவரது தந்தையுடன் அடிக்கடி தகராறு செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், வீட்டில் நேற்று (மே.11) கறிக்குழம்பு சாப்பாடு தயார் செய்திருந்த போது, அதனை மகன் வரும் முன்பே மோகன்தாஸ் சாப்பிட்டதாகத் தெரிகிறது. இதனால் ஏற்கனவே, தந்தையுடன் இருந்த முன்கோபத்துடன், கறிக்குழம்பு காலியானது தெரிந்ததால் ஆத்திரமடைந்த இராமச்சந்திரன், மோகன்தாஸை தந்தை என்றும் பாராமல், முதுகில் கத்தியால் குத்தியுள்ளார். இதில் கத்தி முறிந்து ஒருபகுதி முதுகிலேயே சிக்கிக்கொண்டது.

இதனைத்தொடர்ந்து, தந்தையை இவ்வாறு கறிக்குழம்பிற்காக கத்தியால் குத்திய இராமச்சந்திரன் தப்பியோடி தலைமறைவாகினார். இதனால், படுகாயமடைந்த மோகன்தாஸ் கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு மருத்துவர்கள், கத்தியை அறுவை சிகிச்சை செய்து எடுத்த பிறகு, மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து நாச்சியார்கோயில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள இராமச்சந்திரனை தீவிரமாகத் தேடி வருகின்றனர். கறிக்குழம்பு காலியான விவகாரத்தில் பெற்ற மகனே, தந்தை என்றும் பாராமல் கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற சம்பவம் மேல விசலூர் கிராமத்தில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியியையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: ரூ.350 மெட்டிக்கு ரூ.20 ஆயிரம் செல்போன்.. டிப் டாப் ஆசாமியின் நூதன திருட்டு வீடியோ!

Last Updated : May 12, 2023, 5:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.