ETV Bharat / state

புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து கையெழுத்து இயக்கம் - நடிகை ரோகிணி - ரோகினி

தஞ்சாவூர்: மத்திய அரசு கொண்டு வர உள்ள தேசிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கைக்கு எதிராக நடிகை ரோகிணி, கல்லூரி மாணவிகளிடம் கையெழுத்து பெற்றார்.

Signature Movement Against New Education Policy - Actress Rohini
author img

By

Published : Aug 1, 2019, 3:17 AM IST

தஞ்சை குந்தவை நாச்சியார் கல்லூரிக்கு, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவரும் நடிகையுமான ரோகிணி சென்றார். பின்னர் அவர் கல்லூரி மாணவிகளிடம் மத்திய அரசு கொண்டு வர உள்ள தேசிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கைக்கு எதிராக கையெழுத்து வாங்கினார். இதில் ஏராளமான மாணவிகள் கையெழுத்திட்டனர்.

புதிய கல்விக்கொள்கையை எதிர்த்து கையெழுத்து
மாணவர்களிடையே புதிய கல்விக்கொள்கையை எதிர்த்து கையெழுத்து வாங்கிய ரோகிணி

மத்திய அரசு கொண்டுவர உள்ள தேசிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கையை நான் கண்டிக்கிறேன். தேசிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கையை நாம் எதிர்க்க வேண்டும். இது ஏழை, எளிய மக்களுக்கு எதிரானது. எந்த காலத்திலும், எல்லா இடத்திலேயும் நுழைவுத் தேர்வு என்பது எதிரானது. முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு, ஏழை குழந்தைகளுக்கு இது எதிரானது.

இந்த தேசிய கல்விக் கொள்கையை அனைத்து மாநிலங்களும் எதிர்க்க வேண்டும். சமகல்வி, சம பயிற்சி இல்லாத நிலையில் குழந்தைகள் எப்படி நுழைவுத் தேர்வு எழுதி வெற்றி பெற முடியும், பட்டப் படிப்பில் சேர முடியும்.

நடிகர் சூர்யா தெரிவித்த கருத்தை நான் ஆதரிக்கிறேன். அவர் 10 ஆண்டுகாலமாக குழந்தைகளுக்கு கல்வி கொடுத்து வருகிறார். எனவே குழந்தைகள் எந்த சூழ்நிலையில் எப்படிப்பட்ட இடங்களில் இருந்து வருகிறார்கள் என்பது எங்களை விட அவருக்கு நன்றாக தெரியும். அவருக்கு எதிராகப் பேசுபவர்கள் அதைப் பற்றி சரியாக புரிந்து கொள்ளவில்லை என்றுதான் நான் சொல்கிறேன்.

நுழைவுத்தேர்வு, மும்மொழிக் கொள்கை என அனைத்துமே குழந்தைகளுக்கு அழுத்தம் தருவதாக உள்ளது. அவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக எதுவும் இல்லை. மத்திய அரசு எல்லாவற்றையும் ஒரே விதமாக கையாள பார்க்கிறது. சமஸ்கிருதம், இந்தி கற்றுக் கொடுக்க முயற்சிக்கிறார்கள். இந்துத்துவா கொள்கையை மாணவர்களிடம் புகுத்த வேண்டும் என்று பார்க்கிறார்கள்.

இந்துத்துவாவின் கொள்கைகளையும் கல்வியிலும் பின்வாசல் வழியாக புகுத்துவதற்கு பார்க்கிறார்கள். புதிய கல்விக் கொள்கையை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாணவர்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தி வருகிறேன் என கூறினார் நடிகை ரோகிணி.

Intro:தஞ்சாவூர் ஜூலை. 31-

தஞ்சை குந்தவை நாச்சியார் கல்லூரிக்கு இன்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவரும் நடிகையுமான ரோகினி வந்தார். பின்னர் அவர் கல்லூரி மாணவிகளிடம் மத்திய அரசு கொண்டு வர உள்ள தேசிய கல்வி கொள்கை வரைவு அறிக்கைக்கு எதிராக கையெழுத்து வாங்கினார். இதில் ஏராளமான மாணவிகள் கையெழுத்து இட்டனர்.
Body:
மத்திய அரசு கொண்டுவர உள்ள தேசிய கல்வி கொள்கை வரைவு அறிக்கையை நான் கண்டிக்கிறேன். தேசிய கல்வி கொள்கை வரைவு அறிக்கையை நாம் எதிர்க்க வேண்டும். இது ஏழை, எளிய மக்களுக்கு எதிரானது. எந்த காலத்திலும், எல்லா இடத்திலேயும் நுழைவுத் தேர்வு என்பது எதிரானது. முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு, ஏழை குழந்தைகளுக்கு இது எதிரானது. இந்த தேசிய கல்விக் கொள்கையை எல்லா மாநிலங்களும் எதிர்க்க வேண்டும். சமகல்வி, சம பயிற்சி இல்லாத நிலையில் குழந்தைகள் எப்படி நுழைவுத் தேர்வு எழுதி வெற்றி பெற முடியும்,பட்டப் படிப்பில் சேர முடியும்.
நடிகர் சூர்யா தெரிவித்த கருத்தை நான் ஆதரிக்கிறேன். அவர் 10 ஆண்டுகாலமாக குழந்தைகளுக்கு கல்வி கொடுத்து வருகிறார். எனவே குழந்தைகள் எந்த சூழ்நிலையில் எப்படிப்பட்ட இடங்களில் இருந்து வருகிறார்கள் என்பது எங்களை விட அவருக்கு நன்றாக தெரியும். அதிகமான டாக்டர்களை உருவாக்கி வைத்துள்ளார். அதனால் அவர் கூறிய கருத்து உண்மை. அவருக்கு எதிராகப் பேசுபவர்கள் அதைப் பற்றி சரியாக புரிந்து கொள்ளவில்லை என்றுதான் நான் சொல்கிறேன். நுழைவுத்தேர்வு ,மும்மொழிக் கொள்கை ,மூன்றாம் வகுப்பு முதல் பொதுத் தேர்வு என எல்லாமே குழந்தைகளுக்கு அழுத்தம் தருவதாக உள்ளது. அவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக எதுவும் இல்லை. மத்தியஅரசு எல்லாவற்றையும் ஒரே விதமாக கையாள பார்க்கிறார்கள். சமஸ்கிருதம் ,இந்தி கற்றுக் கொடுக்க முயற்சிக்கிறார்கள். இந்துத்துவா கொள்கையை மாணவர்களிடம் புகுத்த வேண்டும் என்று பார்க்கிறார்கள். இந்துத்துவாவின் கொள்கைகளையும் கல்வியிலும் பின்வாசல் வழியாக புகுத்துவதற்கு பார்க்கிறார்கள். புதிய கல்விக் கொள்கையை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாணவர்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தி வருகிறேன்.Conclusion:Tanjore sudhakaran 9976644011
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.