ETV Bharat / state

டிபன் பாக்ஸ் டீச்சரோடதுதான்... ஆனா சப்பிட்டது யாரா இருக்கும்? - பள்ளி மாணவிகள்

தஞ்சாவூர்: பள்ளி மாணவிகள் ஆசிரியரின் உணவு பாத்திரத்தை கழுவும் வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

child
author img

By

Published : Jun 20, 2019, 6:25 PM IST

தஞ்சாவூர் மாவட்டம் கொத்தங்குடியில் உதவிபெறும் தொடக்கப் பள்ளியில் 45 மாணவ மாணவியர் பயின்றுவருகின்றனர். இவர்களுக்கு கல்வி கற்றுத்தர இரண்டு ஆசிரியர்கள் பணியில் உள்ளனர். சில தினங்களுக்கு முன்பு ஆசிரியரின் உணவு பாத்திரங்களை பள்ளி மாணவ, மாணவியர் கழுவுவது போன்ற காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகிவந்தன.

டிஃபன் பாக்ஸ் மாணவிகள்

இந்நிலையில் இன்று (ஜூன் 20) அப்பள்ளி கூடத்தை உதவி கல்வி அலுவலர் நடராஜன், சைல்டு லைன் அமைப்பினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஆசிரியர் கொண்டுவந்த உணவை மாணவர்கள் சாப்பிட்டதாகவும் அதனைத் தொடர்ந்து அவர்களே அப்பாத்திரங்களை கழுவி வைத்ததாக கூறப்படுகிறது. இங்கு ஆய்வு நடத்திய அறிக்கையை மாவட்ட கல்வி அலுவலருக்கு அனுப்ப உள்ளதாக தெரிவித்தனர்.

தஞ்சாவூர் ஜுன் 20

பள்ளி மாணவிகள் ஆசிரியரின் உணவு பாத்திரத்தை கழுவும் வாட்ஸ் அப் வீடியோ காட்சி.வைர லாக பரவும் இக்காட்சியை  தொடர்ந்து கொத்தங்குடி உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் கல்வித்துறை அலுவலர்கள் ஆய்வு .

தஞ்சாவூர் மாவட்டம்
 கொத்தங்குடி  உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் 45 மாணவ மாணவிகள் பாடம் பயின்று வருகின்றனர். இவர்களுக்கு கல்வி கற்றுத்தர இரண்டு ஆசிரியர்கள் பணியில் உள்ளனர் .கடந்த சில தினங்களாக பள்ளி ஆசிரியரின் டிபன் கேரியரை பள்ளி மாணவ மாணவிகள் கழுவுவது போல் வாட்ஸ்அப் காட்சி வீடியோவில் வைரலாக பரவி வருகிறது.இந்தப் பள்ளிக்கூடம்  கொத்தங்குடி என்ற கிராமத்தில் உள்ளது . இந்நிலையில் இன்று இப்பள்ளியில்  இச்சம்பவம் தொடர்பாக் ஆய்வு செய்த உதவி கல்வி அலுவலர் நடராஜன் மற்றும் சைல்டு லைன் அமைப்பினர் இப் பள்ளியில் இச்சம்பவம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர் .சம்பவம் நடைபெற்றதாக கூறப்படும் நாளில் ஆசிரியர் கொண்டு வந்த உணவை மாணவர்கள் சாப்பிட்ட தாகவும் அதனை தொடர்ந்து அவர்களே அப்பாத்திரங்களை கழுவி வைத்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக ஆய்வு நடத்தியதை  அறிக்கை மூலம்  மாவட்ட கல்வி அலுவலருக்கு தெரிவிக்க இருப்பதாக உதவி கல்வி அலுவலர் நடராஜன் தெரிவித்தார்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.