தஞ்சாவூர்: விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. அனைத்து துறை அலுவலர்கள் முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் விவசாயிகள் தங்களது பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.
அப்போது, தமிழக காவிரி விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கூட்டத்திற்கு வந்து, “தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு, திருவோணம், மதுக்கூர், பட்டுக்கோட்டை மற்றும் வல்லம் பகுதிகளில் எண்ணெய் வித்து பயிரான நிலக்கடலை சம்பா சாகுபடிக்கு மாற்றாக சாகுபடி செய்யப்படுகிறது.
ஆனால், கடலைக்கான தரமான விதை அரசால் வழங்கப்படவில்லை. தனியார் வியாபாரிகள் தரமற்ற விதைகளை கூடுதல் விலைக்கு விவசாயிகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர். விவசாயிகளுக்கு தரமான விதை சான்று பெற்ற வியாபாரிகள் மட்டும் விற்பனை செய்வதை நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்” என கோஷங்கள் எழுப்பி மாவட்ட ஆட்சியரிடம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனு அளித்தனர்.
இதையும் படிங்க: 'நான் தான் டெங்கு; உனக்கு ஊதுவேன் சங்கு' கொசு வேடத்தில் விழிப்புணர்வு!