தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே, ஆச்சனுார் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 50 மாணவ - மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியின் வளர்ச்சிக்காக கிராம மக்கள் சார்பில், பள்ளி மேலாண்மை குழு என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில், பள்ளி மேலாண்மை குழு(school management committee) மூலம் கிராம மக்கள் இணைந்து பள்ளிக்கு தேவையான புதிய கழிவறை, குடிநீர் தொட்டி அமைப்பதற்கான நிதி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் ஆர்.ஓ இயந்திரம், டிவி, நாற்காலி, கணினி, டிஜிட்டல் ப்ரொஜெக்டர் உள்ளிட்ட மாணவர்களுக்கு தேவையான பொருட்களை கிராம மக்கள் இணைந்து சீர்வரிசையாக கொண்டு வந்து வழங்கினர். இவற்றின் மதிப்பு 4 லட்சத்து 65 ஆயிரமாகும்.
திருவிழாபோல் நடந்த இந்த நிகழ்ச்சியில் ஊர் பொதுமக்களை பள்ளியின் ஆசிரியர் சந்தனம் பூங்கொடுத்து கொடுத்து வரவேற்ற காட்சி காண்போரை நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.
இதையும் படிங்க:சென்னையில் ஹெல்மட் அணிந்து சென்ற தம்பதிக்கு வெகுமதி