ETV Bharat / state

சீரமைக்காத சாலையால் 20-கிலோமீட்டர் சுற்றி வரும் அவலம்!

author img

By

Published : Nov 20, 2019, 3:54 PM IST

தஞ்சாவூர்: பத்து வருடங்களாக சீரமைக்கப்படாமல் பழுதடைந்துள்ள சாலையால் பள்ளி வாகனகங்கள், ஆம்புலன்ஸ் ஆகியவை 20-கிலோ மீட்டர் சுற்றி வரும் சூழல் உள்ளது. சாலையை உடனடியாக சீரமைத்துத் தரவேண்டும் இல்லையெனில் போராட்டம் நடைபெறும் என பொதுமக்கள் கூறியுள்ளனர்.

road-damage-in-thanjavur-pattukottai

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ள வா.கொள்ளைக்காடு பகுதியில் 30-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு அரசு பள்ளிகள் மற்றும் காவல் நிலையம் என அனைத்தும் உள்ளதால் இந்த ஊருக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.

புதுக்கோட்டை - தஞ்சை மாவட்டம் எல்லை பகுதி என்பதால் போக்குவரத்து வாகனங்கள் அதிக அளவில் இந்த பகுதி வழியாக செல்கின்றன. மேலும் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியிலிருந்து தஞ்சை மாவட்டம் பேராவூரணிக்கு செல்ல வேண்டுமென்றால் வா.கொள்ளைகாடு வழியாகத்தான் செல்ல வேண்டும்.

இந்தப் பிரதான சாலை கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக இருந்து வருகிறது. இந்த வழித்தடத்தில் தான் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் சென்று வருகின்றன. மேலும் விவசாய தேவைகளுக்காக செல்லும் வாகனங்களும் இந்த சாலையில்தான் செல்ல வேண்டியுள்ளது.

பழுதடைந்த சாலை

பள்ளி வாகனங்கள் இப்பகுதியில் செல்லமுடியாமல் கிட்டத்தட்ட 20 கிலோ மீட்டர் சுற்றி பட்டுக்கோட்டை அறந்தாங்கி பிரதான சாலையை கடந்து செல்ல வேண்டியுள்ளது. இதனால் பள்ளி குழந்தைகள் உரிய நேரத்திற்கு பள்ளிக்குச் செல்ல முடிவதில்லை. இதேபோல உடல் நலம் பாதித்து ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிகளை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுச் செல்ல முடியாமல் பல உயிரிழப்புகள் ஏற்படுகிறது.

ஊர் பொதுமக்கள் - வாட்டாத்திக்கோட்டை.

தற்போது மழைக்காலம் என்பதால் இந்த சாலை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆகவே இந்த சாலையை உடனடியாக சீரமைத்து முறைப்படுத்த வேண்டும் தவறும் பட்சத்தில் இப்பகுதியிலுள்ள ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டு மிகப்பெரிய சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என இப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.

இதையும் படிக்க: தேசிய ஆண்கள் பாதுகாப்பு ஆணையம் அமைக்கக் கோரிக்கை!

Intro:பத்து வருடங்களாக சீரமைக்கப்படாத பழுதடைந்த சாலை பள்ளி வாகனம் மற்றும் ஆம்புலன்ஸ் 20 கிலோமீட்டர் சுற்றி வரும் அவலம்

Body:பட்டுக்கோட்டை அருகில் உள்ள வாட் டாத்திக்கோட்டை கொள்ளைக்காடு ஊராட்சி. இந்த ஊராட்சி இப்பகுதியிலுள்ள 30க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு ஒரு வணிக ரீதியான பகுதியாகும் .மேலும் இங்கு அரசு பள்ளிகள் மற்றும் காவல் நிலையம் என அனைத்தும் உள்ளதால் இந்த ஊருக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் வந்து செல்வார்கள் .மேலும் இந்தப் பகுதி புதுக்கோட்டை மாவட்டம் தஞ்சை மாவட்டம் எல்லை பகுதி என்பதால் போக்குவரத்து வாகனங்கள் அதிக அளவில் இந்த பகுதிக்கு வந்து செல்கின்றன. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி யிலிருந்து தஞ்சை மாவட்டம் பேராவூரணி க்கு செல்ல வேண்டுமென்றால் வாட்டாத்தி கோட்டை கொள்ளைகாடு வழியாகத்தான் செல்ல வேண்டும் .இந்த பிரதான சாலை கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக சீர் அமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக இருந்து வருகிறது .இந்த வழித்தடத்தில் தான் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் சென்று வருகின்றன. மேலும் விவசாய தேவைகளுக்காக செல்லும் வாகனங்களும் இந்த சாலையில்தான் செல்ல வேண்டியுள்ளது. பள்ளிக்குழந்தைகளின் வாகனங்கள் இப்பகுதியில் செல்லமுடியாமல் கிட்டத்தட்ட 20 கிலோ மீட்டர் அதாவது பட்டுக்கோட்டை அறந்தாங்கி பிரதான சாலையை சென்றுதான் செல்ல வேண்டியுள்ளது .இதனால் பள்ளி குழந்தைகள் உரிய நேரத்திற்கு பள்ளிக்கு செல்ல முடிவதில்லை .இதேபோல உடல் நலம் பாதித்து ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிகளை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாமல் நிறைய உயிரிழப்புகள் ஏற்படுகிறது. தற்போது மழைக்காலம் என்பதால் இந்த சாலை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது .சாலையில் உள்ள ஒவ்வொரு குழியிலும் தண்ணீர் தேங்கி உள்ளதால் குழியின் ஆழம் எந்த அளவுக்கு உள்ளது என கண்டுபிடிக்க முடியாமல் சில நேரங்களில் விபத்துக்குள்ளாகி விடுமோ என்ற அச்சத்தில் சில ஓட்டுனர்கள் இந்த வழியை தவிர்த்து 20 கிலோமீட்டர் சுற்றி சென்றாலும் பரவாயில்லை என்ற எண்ணத்துடன் 20 கிலோமீட்டர் சுற்றி வருகின்றனர் .இந்நிலையில் இந்த சாலையை உடனடியாக சீரமைத்து உரிய போக்குவரத்தை முறைப்படுத்த வேண்டும் தவறும் பட்சத்தில் இப்பகுதியிலுள்ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டு மிகப்பெரிய சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என இப்பகுதி மக்கள் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.