தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அடுத்த உமையவள் ஆற்காட்டில் டாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து உமையவள் ஆற்காடு, பனவெளி, நாகத்தி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த சுமார் 150 பேர் திருவையாறு – தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தஞ்சை கூடுதல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் தலைமையிலான காவல் துறையினர், சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, டாஸ்மார்க் கடை திறக்க மாட்டோம் என்று சம்பந்தப்பட்ட அலுவலர்கள் எழுத்துப்பூர்வமாக உத்திரவாதம் கொடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பில் கோரிக்கைவைக்கப்பட்டது.
அதற்கு சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்கள் வந்ததும் பேசிக்கொள்ளலாம், தற்போது சாலை மறியலைக் கைவிடுங்கள் என்று காவல் துறையினர் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்குப் பொதுமக்கள் உடன்படவில்லை.
கைது நடவடிக்கை
இதனையடுத்து, சாலை மறியலில் ஈடுபட்டிருந்த 150-க்கு மேற்பட்டவர்களைக் காவல் துறையினர் வலுக்கட்டாயமாக கைதுசெய்து, கண்டியூர் அருகே தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். இந்தச் சாலை மறியல் காரணமாக அப்பகுதியில் சுமார் 3 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையும் படிங்க: மதுபோதையில் தகராறில் ஈடுபட்ட கணவனை கொலை செய்த மனைவிக்கு ஆயுள்!