தஞ்சை மாவட்டத்துக்குள்பட்ட பகுதியான பட்டுக்கோட்டையில், ஒரு மாதத்திற்கு முன்னர் இப்பகுதி விவசாயிகள் சம்பா சாகுபடி பணிகளைத் தொடங்கி விவசாயம் செய்துவந்தனர். தற்போது கதிர்வரும் தருவாயில், பயிர்கள் அனைத்தும் ஆனைக்கொம்பன் நோய் தாக்குதலுக்குள்ளாகி இருக்கின்றன.
பட்டுக்கோட்டை தொகுதிக்குள்பட்ட பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், மதுக்கூர் உள்ளிட்ட கிராமங்களிலுள்ள சுமார் 20 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்களை இந்த ஆனைக்கொம்பன் நோய் தாக்கியுள்ளது. இதனால் இப்பகுதி விவசாயிகள் மிகவும் கவலை அடைந்துள்ளனர்.
88,000 ட்விட்டர் கணக்குகள் நீக்கம்!
தற்போது ஆனைக்கொம்பன் நோய் தாக்கியுள்ளதால், இதிலிருந்து எந்தவித பலனும் எதிர்பார்க்க முடியாது என்று ஆற்றாமையை வெளிப்படுத்தும் விவசாயிகள், ஆதலால் ஏக்கர் ஒன்றுக்கு 30 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி செலவு செய்துவிட்டு, தற்போது என்ன செய்வதென்று தெரியாமல் தவித்துவருகின்றனர்.
டெல்லியில் நாளை தேசிய விருது வழங்கும் நிகழ்ச்சி!
இதையடுத்து இப்பகுதியிலுள்ள விவசாய சங்கத்தினர் ஆனைக்கொம்பன் நோய் தாக்குதலுக்குள்ளான நெற்பயிர்களைக் கணக்கில் கொண்டு, உடனடி நிவாரணமாக ஏக்கர் ஒன்றுக்கு 30 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கைவைத்துள்ளனர்.