தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம், சேதுபாவாசத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மீனவர்கள், மீன்பிடித் தடை காலத்தின் காரணமாக எந்த வருமானமும் இல்லாமல் தவித்து வருகின்றனர். ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை மீன்பிடி தடை காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
மீன் பிடி தடைக்கால சமயத்திலேயே மீனவர்கள் தங்களது படகுகள், வலைகளை சீரமைத்து வந்தனர். ஆனால், தற்போது ஊரடங்கு அறிவிக்கப்பட்டதையடுத்து மீனவர்கள் படகுகள், வலைகளை பராமரிக்க முடியாமல் சிக்கலுக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில் மீன்பிடி தடைக்காலம் நிறைவடைய இன்னும் ஒரு சில தினங்களே உள்ளதால் படகுகள், வலைகளை பராமரிக்க மீனவர்களுக்கு கால அவகாசம் தேவைப்படுகிறது. மேலும் கரோனா தொற்றின் காரணமாக மேலும் இரண்டு வாரத்திற்கு மீன்பிடி தடைக் காலத்தை நீட்டிக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க : பழங்குடியின மக்களின் கடவுள் 'பிர்சா முண்டா'!