ETV Bharat / state

அமெரிக்க தமிழாசிரியர்களுக்கு தஞ்சை பல்கலைக்கழகம் சார்பில் புத்தொளி பயிற்சி வகுப்பு

author img

By

Published : Jul 14, 2020, 10:15 PM IST

தஞ்சாவூர்:தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகமானது, அமெரிக்காவிலுள்ள தமிழ் பள்ளி ஆசிரியர்களுக்குப் புத்தொளிப்பயிற்சி வகுப்புகளை நடத்தவுள்ளது.

Refreshing training class for American Tamil teachers on behalf of Tanjore University

வட அமெரிக்காவில் இயங்கி வரும் தமிழ்ப்பள்ளிகளின் ஆசிரியர்களுக்காக, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் தமிழ் வளர் மையம் இணையவழிப் புத்தொளிப்பயிற்சி ஒன்றைத் தொடங்கியுள்ளது .

அமெரிக்காவிலுள்ள தமிழ்ப் பள்ளிகளைச் சேர்ந்த ஏறத்தாழ 208 தமிழாசிரியர்களுக்கு, " மாறிவரும் உலகச்சூழலில் தமிழ்மொழிக் கற்றல் - கற்பித்தலும் , புதிய உத்திகளும் " என்னும் தலைப்பில் ஏறத்தாழ இரண்டு மாதகாலப் பயிற்சி இதன்மூலம் வழங்கப்படவுள்ளது .

அயலகத்தில் வாழும் தமிழர்களுக்குத் தமிழைக் கற்பிப்பதற்காக தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறையால் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் தமிழ் வளர் மையமும் , அமெரிக்காவின் எட்யுரைட் அறக்கட்டளையும் இணைந்து இந்த நிகழ்வினை ஒருங்கிணைத்துள்ளன .

இப்பயிற்சியினைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கோ.பாலசுப்ரமணியன் தலைமையேற்று இன்று (ஜூலை14) தொடங்கிவைத்தார்.

இதையும் படிங்க: கரோனா கேக், முகக்கவச பரோட்டா, கோவிட்-19 தோசை' - விழிப்புணர்வின் உச்சத்தில் உணவகங்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.