ராமேஸ்வரம் நடராஜபுரம் பகுதியிலுள்ள முனியசாமி (47), ரஞ்சித் குமார் (23), மதன் (26), இலங்கேஸ்வரன் (20), தரக்குடியன் (25), நந்தகுமார் (23), செந்தில் (31), முனீஸ்வரன் (24), உமாகாந்த்(19), காளிதாஸ் (19) என பத்து மீனவர்கள் கடந்த 29ஆம் தேதி படகு வாங்குவதற்காக கடலூருக்குச் சென்றனர்.
பின்னர் படகு வாங்கிவிட்டு கடல்வழியாக ராமேஸ்வரம் திரும்பிக் கொண்டிருந்தபோது, மல்லிப்பட்டினம் அருகே கடலில் ஏற்பட்ட சூறைக்காற்றால் படகு கவிழ்ந்து கடலில் மூழ்கியது. இதில் கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த மீனவர்களில் செந்தில் வேல்,காளிதாஸ் என்ற இருமீனவர்கள் நீந்தி கரையை வந்தடைந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த சக மீனவர்கள், மீதமுள்ள எட்டு மீனவர்களை கடலில் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் மீனவர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.