ETV Bharat / state

தஞ்சையில் தரம் உயரும் ஆரம்ப சுகாதார நிலையங்கள்! மத்திய அரசின் சான்று... - National Quality Assurance Standards certificate

National Quality Assurance Standards for PHC: தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 2 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு மத்திய அரசின் தர விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மருத்துவக் குழுவினரை கௌரவிக்கும் வகையில் தஞ்சாவூர் மாநகராட்சி சார்பில் பாராட்டி சால்வை அணிவிக்கப்பட்டது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Aug 16, 2023, 4:43 PM IST

தஞ்சையில் தரம் உயரும் ஆரம்ப சுகாதார நிலையங்கள்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கரந்தை மற்றும் கல்லுகுளம் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு மத்திய அரசின் தர விருது வழங்கப்பட்டுள்ளது (NATIONAL QUALITY ASSURANCE STANDARDS). கொறோனா பெருந்தொற்று காலங்களில் மக்களை நோயிலிருந்து மீட்டெடுக்க, ஆரம்ப சுகாதார நிலையங்களின் (primary Health Centre) பங்களிப்பு அதிகமாக இருந்தது. அது மட்டுமின்றி குழந்தைகளுக்கு, கர்ப்பிணிப் பெண்களுக்குத் தடுப்பூசி வழங்குவது என பல சேவைகளை இந்த மையம் செய்து வருகிறது.

இதன் மூலம் கிரம பகுதிகளில் பிரசவ கால மரணங்கள் அதிக அளவில் தடுக்கப்பட்டது என புள்ளி விபரங்கள் கூறுகிறது. மக்கள் எளிய முறையில் அனுகவும், விரைந்து மருத்துவ சேவைகளை பெறவும் இந்த மையங்கள் உதவியாக இருந்து வருகிறது. இதன் மூலம் மக்களுக்கு சிறந்த முறையில் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.

ஆரம்ப சுகாதார நிலையங்களானது வளரும் நாடுகளில் மக்களுக்கான பொது சுகாதார சேவைகளை வழங்கிடும் அடிப்படை அமைக்கப்பட்ட மருத்துவ நிலையமாகும். முக்கியமாக கிராமப்புறங்களில் அனைத்து மக்களுக்கும் எந்த நேரமும் எளிய முறையில் இலவச மருத்துவ வசதிகள் செய்து தரக்குடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தஞ்சாவூர் மாநகராட்சியின் 51 வார்டுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் கரந்தை, கல்லுகுளம், மகர்நோன்பு சாவடி, சீனிவாசபுரம் ஆகிய கிராமங்களின் 4 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. மத்திய அரசானது, தேசிய தர உறுதி நிர்ணய திட்டத்தின் கீழ், இந்திய அளவில் சிறப்பாக செயல்படுகின்ற மருத்துவமனைகளை தேர்ந்தெடுத்து சான்றிதழ்கள் மற்றும் விருதுகளை வழங்கி வருகிறது.

இதனையடுத்து தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கல்லுகுளம் மற்றும் கரந்தை நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் மத்திய அரசின் தேசிய தர நிர்ணய மதிப்பீட்டாளர்கள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வின்போது பொதுநல மருத்துவம், மகப்பேறு நலப்பிரிவு, சிசு மற்றும் பச்சிளம் குழந்தை பிரிவு, தடுப்பூசி பிரிவு, குடும்ப நல கட்டுப்பாடு, தொற்றும் மற்றும் தொற்றாநோய் பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, மருந்தகம், ஆய்வகப்பிரிவு, வெளிப்புற நலப் பிரிவு மற்றும் பொது நிர்வாக பிரிவு ஆகியவற்றின் பதிவேடுகள் ஆய்வு செய்யப்பட்டன.

இதையும் படிங்க: "நீங்க கொடி ஏத்துறதை பார்க்கனும்" மாணவனின் கனவை நிறைவேற்றிய முதலமைச்சர் ஸ்டாலின்!

மேலும் அந்த நிலையத்தின் நோயாளிகளிடம் சிகிச்சை முறை குறித்த பின்னூட்டம், சிகிச்சை வழங்கியவர்களிடமிருந்து நேர்காணல் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டு மதிப்பீட்டாளர்களின் மதிப்பீடு வழங்கப்பட்டது. தேசிய தர நிர்ணய மதிப்பீட்டாளர்கள் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் கிடைத்த மதிப்பீடு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் கல்லுகுளம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 91.5 சதவீதம் மதிப்பெண்களும், கரந்தை நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 82.2% மதிப்பெண்களும் வழங்கியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் தேசிய தர உறுதி நிர்ணய திட்ட விருதுகள் வழங்கப்பட்டது. அதனை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார். தஞ்சாவூர் மாநகராட்சி, கரந்தை மற்றும் கல்லுகுளம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ குழுவினர் அந்த விருதுகளை பெற்றுக் கொண்டனர்.

இந்நிலையில் மருத்துவ குழுவினரை கௌரவிக்கும் வகையில் தஞ்சாவூர் மாநகராட்சி சார்பில் நேற்று சுதந்திர தின விழா ஆகஸ்ட் 15ஆம் தேதி மாநகராட்சி வளாகத்தில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி. நீலமேகம் மேயர் ராமநாதன், துணை மேயர் டாக்டர் அஞ்சுகம்பூபதி, ஆணையர் சரவணகுமார், மாநகர் நல அலுவலர் சுபாஷ் காந்தி உள்ளிட்டோர் மருத்துவ குழுவினரை பாராட்டி சால்வை அணிவித்து கௌரவப்படுத்தினர்.

இதன் மூலம் தஞ்சாவூர் மாநகராட்சியில் 2 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் தேசிய தர நிர்ணய சான்றிதழ் பெற்றுள்ளன, இதனால் மருத்துவமனைகளின் தரம் உயர்த்தப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்க வழிவகை ஏற்படும். இது குறித்து கரந்தை நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் மணிமேகலை கூறும்போது, "கரந்தை, கல்லுகுளம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு இந்தாண்டு தேசிய தர சான்றிதழ் பெற்றுள்ளோம், தனியார் மருத்துவமனைக்கு நிகராக அரசு மருத்துவமனைகள் விளங்க வேண்டும் என்பதற்காக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல் பணியை தொடர்ந்து சிறப்பாக செய்வோம்” என்று உறுதி அளித்து மகிழ்ச்சி தெரிவித்தார்.

இதையும் படிங்க: "மாணவர்களிடம் ஜாதி மோதலை ஆர்எஸ்எஸ் போன்ற அமைப்புகள் திணிக்கின்றன" - திருமாவளவன் குற்றச்சாட்டு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.