தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் தேமுதிக தஞ்சை தெற்கு மாவட்ட அவைத்தலைவர் முருகேசனின் இல்ல திருமண விழா நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்த அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஐயகாந்த் மணமக்களை வாழ்த்தி திருமணத்தை முன்னின்று நடத்தி வைத்தார்.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் வெளிநாட்டு பயணம் மாபெரும் வெற்றி பயணமாக அமையவேண்டும் என்று வாழ்த்தினார். கச்சத்தீவு, ஸ்டெர்லைட், மீனவர்கள் உள்ளிட்ட அனைத்து பிரச்னைக்கும் திமுக கையூட்டுப் பெற்று, கையெழுத்து போட்டுவிட்டு தற்போது நீலிக்கண்ணீர் வடிக்கிறது என்று சாடினார்.
ஏதாவது ஒரு பொய்யை சொல்லி அரசியல் ஆதாயம் தேடுவதுதான் திமுகவின் நோக்கமாக இருக்கிறது என்றும் பிணத்திடம் இருந்து மோதிரத்தை திருடும் கட்சி தமிழ்நாட்டில் இருக்கிறது என்றால் அது திமுக தான் எனவும் கடுமையாக விமர்சித்தார்.
கச்சதீவை விட்டு கொடுத்த திமுகவே அதனை மீட்பதாக கூறுவது மிகபெரிய அவனமாம் என்று குறிப்பிட்ட அவர், விரைவில் வர உள்ள உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக-அதிகவுடன் கூட்டணி வைத்து போட்டியிடும் என்று தெரிவித்தார்.