ETV Bharat / state

தஞ்சாவூரில், பிரபல ரவுடி வெட்டிக் கொலை -போலீசார் விசாரணை - rowdy murder police investigate this case

தஞ்சாவூர்: முன்விரோதம் காரணமாக பிரபல ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

rowdy murder
author img

By

Published : Nov 24, 2019, 11:36 PM IST

தஞ்சாவூர் அருகே துலுக்கம்பட்டி நாடார் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன்(32). இவர் சொந்தமாக மாட்டு பண்ணை வைத்து பாராமரித்து வந்தார். இவரது மனைவி ராஜலட்சுமி. இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். ராஜலட்சுமி மலேசியாவில் தங்கி வேலை பார்க்கிறார். இதனால், மணிகண்டன் தனது மகள்களுடன் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

பிரபல ரவுடி வெட்டிக்கொலை

மணிகண்டன் மீது தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக காவல் நிலையத்தில் குற்ற வழக்கு ஒன்று உள்ளது. இதுதொடர்பாக அவர் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் மணிகண்டன் பிணையில் வெளியே வந்தார். இந்நிலையில் மணிகண்டன், அதே பகுதியில் மாடுகளுக்கு தீவனத்துக்காக, புல் அறுக்க பண்ணைக்கு இருசக்கர வாகனத்தில் சென்றார்.

அங்கு புல் அறுத்து கொண்டிருந்த போது இவரை பின்தொடர்ந்து வந்த 15 பேர் கொண்ட கும்பல் அவரை சுற்றிவளைத்து அரிவாளால் வெட்டியது. இதில், தலையில் வெட்டுப்பட்டு சம்பவ இடத்திலேயே மணிகண்டன் இறந்தார். இதையடுத்து மர்ம கும்பல், அங்கிருந்து தப்பியோடியது. மணிகண்டன் கொலை செய்யப்பட்ட இடத்திற்கு வந்த உறவினர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக காவல்துறையினர் மணிகண்டனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.எஸ்.மகேஸ்வரன் கொலை குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

கோயில் விழா தகராறு:

கடந்த ஆடி மாதம் துலுக்கம்பட்டியில் கோயில் திருவிழா நடந்தது. திருவிழாவை காண மணிகண்டனின் உறவினர்கள் வந்திருந்தனர். திருவிழாவில் ஆடுகிடா வெட்டி பங்கு போடப்பட்டது. இதில் பங்கு பிரிப்பதில் மணிகண்டனின் உறவினர்களுக்கும், அதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி மோதல் ஏற்பட்டது.

இதில் ஒருவருக்கொருவர் மாறி மாறி தாக்கிக் கொண்டனர். இந்த சம்பவத்தில் இருதரப்பினரும் காயம் அடைந்தனர். இந்த மோதல் காரணமாக மணிகண்டனும் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தார்.

இந்த கோயில் விழா தகராறு காரணமாக மணிகண்டன் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணத்தில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Intro:தஞ்சாவூர் நவ 24

தஞ்சாவூர் அருகே முன்விரோதம் காரணமாக ரவுடி வெட்டி கொலைBody:
தஞ்சாவூர் அருகே துலுக்கம்பட்டி நாடார் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன்(32). இவர் சொந்தமாக மாட்டு பண்ணை வைத்து அதனை பாராமரித்து வந்தார். இவரது மனைவி ராஜலட்சுமி. இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். ராஜலட்சுமி மலேசியாவில் தங்கியிருந்து வேலை பார்க்கிறார். இதனால் மணிகண்டன் தனது மகள்களுடன் வீட்டில் வசித்து வந்தார்.
இந்நிலையில் மணிகண்டன் மீது தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக போலீஸ் நிலையத்தில் குற்ற வழக்கு உள்ளது. இதுதொடர்பாக அவர் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் மணிகண்டன் ஜாமீனில் வெளியே வந்தார்.

இந்நிலையில் மணிகண்டன், அதே பகுதியில் மாடுகளுக்கு தீவனத்துக்காக, புல் அறுக்க பண்ணைக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது அங்கு புல் அறுத்து கொண்டிருந்த போது திடீரென 15 பேர் கொண்ட கும்பல் வந்தனர்.
அப்போது புல் அறுத்து கொண்டிருந்த மணிகண்டனை, அந்த கும்பல் சுற்றிவளைத்து அரிவாளால் வெட்டியதில் தலையில் வெட்டுப்பட்டு சம்பவ இடத்திலேயே மணிகண்டன் இறந்தார்.
இதையடுத்து மர்ம கும்பல், அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். மணிகண்டன் கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்த அவரது உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் திரண்டனர்.
இந்த கொலை குறித்து தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக போலீஸாருக்கு வந்து மணிகண்டன் உடலை கைப்பற்றி தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.எஸ்.மகேஸ்வரன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரித்தார்.

கோயில் விழா தகராறு:

கடந்த ஆடி மாதம் துலுக்கம்பட்டியில் கோயில் திருவிழா நடைபெற்றது. இதனை பார்ப்பதற்கு மணிகண்டனின் உறவினர்கள் வந்திருந்தனர். திருவிழாவில் ஆட்டுகிடா வெட்டி பங்கு போடப்பட்டது. இதில் பங்கு பிரிப்பதில் மணிகண்டனின் உறவினர்களுக்கும், அதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி மோதல் ஏற்பட்டது. இதில் ஒருவருக்கொருவர் மாறி மாறி தாக்கி அடித்து கொண்டனர். இந்த சம்பவத்தில் இருதரப்பினரும் காயம் அடைந்தனர்.
இதனால் இந்த மோதல் காரணமாக மணிகண்டனும் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தார். இந்த கோயில் விழா தகராறு காரணமாக மணிகண்டன் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு காரணமா? என பல்வேறு கோணத்தில் போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.Conclusion:Tanjore sudhakaran 9976644011
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.