தஞ்சை பெருவுடையார் கோயில் குடமுழுக்கு விழாக்காக பல்வேறு ஏற்பாடுகள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக செய்து வருகின்றன. இந்நிலையில் கும்பகோணம் தனியார் கல்லூரியைச் சேர்ந்த 72 மாணவர்கள் தமிழ் மன்னன் ராஜராஜ சோழன் வாழ்க்கை வரலாற்றை எடுத்துரைக்கும் விதமாக விளங்கக்கூடிய அமரர் கல்கி அவர்களால் எழுதப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க பொன்னியின் செல்வன் நூலில் வரும் கதைகளைத் தத்ரூபமாக ஓவிய முறையில் தஞ்சை திலகர் திடல் பகுதியில் வரைந்துள்ளனர்.
மேலும், கண்ணைக் கவரும் வகையில் வரையப்பட்டுள்ள ராஜராஜ சோழனின் வாழ்க்கை வரலாற்றைக் கண் முன்னே கொண்டுவரும் விதமாக ஓவியங்கள் அமையப் பெற்றுள்ளது கூடுதல் சிறப்பாகும். குடமுழுக்குக்கு வரும் பக்தர்கள் ராஜராஜ சோழனின் வரலாற்றையும், சாதனைகளையும் புரிந்துகொள்ள ஓவியம் வழிவகை செய்யும் என்கின்றனர் அப்பகுதி மக்கள்.
இதையும் படிங்க: தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு - ஈடிவி பாரத் நேரலை!