ETV Bharat / state

தமிழ்நாட்டில் திட்டமிட்ட கொலைகள் அதிகரிப்பு - பொன் ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு - law and order status in TamilNadu

தமிழ்நாட்டில் நாள்தோறும் திட்டமிட்ட கொலைகள் அதிகரித்து வருவதாகவும், மாணவரே மற்றொரு மாணவரை கொலை செய்யும் அவலம் உண்டாகி உள்ளதாகவும் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் திட்டமிட்ட கொலைகள் அதிகரிப்பு - பொன் ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு!

author img

By

Published : Mar 11, 2023, 5:09 PM IST

தஞ்சாவூர்: கும்பகோணம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில், வருகிற 2024 நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வது குறித்து, இன்று (மார்ச் 11) பாரதிய ஜனதா கட்சியின் தஞ்சை வடக்கு, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களை உள்ளடக்கிய சக்தி கேந்திரா (4 அல்லது 5 பூத் கமிட்டிகளை கொண்ட அமைப்பு) பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் செய்தியாளர் சந்திப்பு

இதில் அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமான பொன் ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். தொடர்ந்து அவர், பொறுப்பாளர்களின் கருத்துக்களை கேட்டறிந்தார். பின்னர் அவர்களுக்கு தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொண்டு, அணியின் வெற்றிக்கு பாடுபடுவது குறித்த தகுந்த ஆலோசனைகளையும் வழங்கினார்.

இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த பொன் ராதாகிருஷ்ணன், “தமிழ்நாட்டில் நாள்தோறும் திட்டமிட்ட கொலைகள் அதிகரித்து வருகிறது. மாணவனே மற்றொரு மாணவனை கொலை செய்யும் அவலமும், ஆசிரியர் மாறுதலுக்காக மாணவர்கள் போராடுவதும் இதுவரை தமிழ்நாட்டில் இல்லாத மாற்றமாக உள்ளது. தமிழ்நாட்டை ஆளும் திமுக அரசு, சரியாக நிர்வாகம் செய்யாவிட்டால், சட்டம் ஒழுங்கு மிக மோசமான நிலைக்கு போகும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

இது தமிழ்நாட்டிற்கு உகந்தது அல்ல. நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி மற்றும் அதிமுக கூட்டணி குறித்து இரு கட்சிகளுமே தனித்தனியாக தெளிவுபடுத்தி விட்டது. சமீப நாட்களாக பாஜக - அதிமுக கருத்து மோதல்கள் என்பது, கருத்து வேறுபாடு இல்லாத குடும்பம் இந்த உலகிலேயே இல்லை என்பதுதான். எடப்பாடி பழனிசாமி புகைப்படங்களை பாஜகவினர் தீயிட்டு எரித்த சம்பவங்கள் குறித்து பேசுவது முறையாக இருக்காது.

அதிமுக அணிகள் இணைவது குறித்து அந்த கட்சியினர் கவனித்துக் கொள்வார்கள். ஒவ்வொரு கட்சியிலும், அதில் இருப்பவர்கள் நீண்ட காலம் இருக்க வேண்டும் என்றுதான் விரும்புவார்கள். சில நேரங்களில் கருத்து வேறுபாடு காரணமாக மற்றொரு கட்சிக்கு அவர்கள் செல்வது தவிர்க்க முடியாதது. இது பல கட்சிகளில் நடந்துள்ளது. இது ஒன்றும் புதிதல்ல. தேசிய அளவில், தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக அங்கம் வகிக்கிறது.

தமிழ்நாட்டில் இந்த கூட்டணி யாருடைய தலைமையில் இயங்கும் என்பது குறித்து பாஜகவின் தேசிய தலைமையும், மாநில நிர்வாகமும் முடிவு செய்யும். தேர்தலில் ஒவ்வொரு கட்சியும், அதிக இடங்களைப் பிடிக்க வேண்டும் என்றுதான் விரும்பும். அதுபோலத் தான் நாங்களும் புதுச்சேரி உள்ளிட்ட 40 இடங்களிலும் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கோடு உழைத்துக் கொண்டிருக்கிறோம்” என தெரிவித்தார். இந்த நிகழ்வில் பாஜகவின் மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம், தஞ்சை வடக்கு மாவட்டத் தலைவர் சதீஷ்குமார் உள்ளிட்ட பல நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

இதையும் படிங்க: "தமிழக முதல்வருக்கு காதும் இல்லை, வாயும் இல்லை" - ஹெச்.ராஜா விமர்சனம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.