இது குறித்து செய்தியாளர்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேஷ்முக் சேகர் சஞ்சய் கூறியதாவது, "தஞ்சாவூர் மாவட்டத்தில் கரோனா தடுப்புப் பணியில் காவல் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஊரடங்கு விதிமுறைகளை மீறி, தேவையில்லாமல் வெளியே சுற்றுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தேவையின்றி வெளியே வந்ததாக 200க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கு விதிமுறைகளை மீறியதாக இதுவரை ரூ. 2 கோடிக்கு மேல் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஒரு லட்சத்துக்கும் அதிகமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கடந்த 3 நாள்களாக புதிதாக 250 வழக்குகள் போடப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கை, இனிமேல் இன்னும் தீவிரமாக இருக்கும்" என்றார்.
இதையும் படிங்க: ஆவின் நிறுவனத்தில் முறைகேடு: ஐந்து பேர் பணியிடை நீக்கம்?