வேலூர்: குடியாத்தம் அருகே பள்ளத்தில் ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக பயணம் செய்த அனைவரும் உயிர் தப்பியுள்ளனர். இச்சம்பவம் குறித்து குடியாத்தம் நகர காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வேலூர் குடியாத்தம் அடுத்த தங்கம் நகர் வீர சிவாஜி இரண்டாவது தெருவை சேர்ந்தவர் விக்னேஷ். இவர் கடந்த நவ.22 வெள்ளிக்கிழமை மாலை தற்கொலை செய்துகொண்டுள்ளார். இவரது இறுதிச்சடங்கில் கலந்துகொண்டு சொந்த ஊருக்கு திரும்பிய விக்னேஷின் உறவினர் சுமதி மற்றும் அவரின் குடும்பத்தினர், குடியாத்தம் பேருந்து நிலையத்திலிருந்து - ரயில் நிலையம் வரை ஆட்டோவில் சென்றுள்ளனர்.
அப்பொழுது பள்ளிகொண்டா சாலையில் ஆட்டோ சென்று கொண்டிருந்த நிலையில், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ தனியார் கல்லூரி அருகே சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது விபத்துக்குள்ளாயுள்ளது. இதில் சுமதிக்கு கை முறிவு ஏற்படட்டுள்ளது. இதனையடுத்து, விபத்தில் காயம் ஏற்பட்ட ஓட்டுநர் முருகன் மற்றும் சுமதி குடும்பத்தினரை அங்கிருந்தவர்கள்மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
தொடர்ந்து, சுமதி மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த குடியாத்தம் நகர காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், பள்ளிகொண்டா சாலையில் இருக்கும் பள்ளத்தில் தொடர்ந்து விபத்து ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது. எனவே, இதனை தடுக்கும் வகையில் சாலையோரம் தடுப்பு தடுப்புச்சுவர் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: உ.பி.யில் அதிகாலை நடந்த கார் விபத்து; நான்கு பெண்கள் உட்பட 5 பேர் பலி..!
அதேபோல், வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பிரேக்டவுனாகி நின்ற லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து வேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணையில், வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகே சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில், நேற்று, சனிக்கிழமை (நவ.24) அதிகாலை வாலாஜாவில் இருந்து ஓசூர் சென்று கொண்டிருந்த லாரி பிரேக்டவுனாகி தேசிய நெடுஞ்சாலையில் நின்றுள்ளது. இந்நிலையில் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்த இருவர், நின்று கொண்டிருந்த லாரியின் பின்புறம் மோதியுள்ளனர்.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றொருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், படுகாயம் அடைந்த்வரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். உயிரிழந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தொடர்ந்து, இந்த விபத்தில் உயிரிழந்தவர் யார் என காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்