2019 நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 18 ஆம் நாள் நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதேநாளில், தமிழ்நாட்டில் 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும் நடத்தப்பட உள்ளது.
தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்தநிலையில், தமிழகம் முழுவதும் பொது இடங்கள், அரசு அலுவலகங்களின் சுவர்களில் வரையப்பட்ட சுவர் ஓவியம், தேர்தல் விளம்பரப் பலகை, கட்சிக்கொடிகள் ஆகியவை அகற்றப்பட்டு வருகின்றன.
மேலும் தொடர்ந்து ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இது குறித்து பேசிய தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன், அடுத்த மாதம் நடைபெற உள்ள தஞ்சாவூர் பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு பாதுகாப்பு பணிக்கு வர விருப்பம் உள்ள ஓய்வு பெற்ற காவலர்கள் முன்னாள் ராணுவத்தினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இயங்கி வரும் தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.