ETV Bharat / state

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி: 17 வயது சிறுவன் கைது

author img

By

Published : May 15, 2020, 8:13 PM IST

தஞ்சை: கும்பகோணம் உட்கோட்டத்திலுள்ள பானாதுரையிலுள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்த 17 வயது சிறுவனை 7 மணி நேரத்தில் காவல் துறையினர் கைது செய்தனர்.

தஞ்சை செய்திகள்  கும்பகோணம் ஏடிஎம் உடைப்பு  பானாதுரை ஏடிஎம் உடைப்பு  thanjavur district news  panadurai atm  kumbakonam atm robbery
ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி: 17 வயது சிறுவன் கைது

இது தொடர்பாக கிடைத்த புகாரின் அடிப்படையில், காவல் துறை கண்காணிப்பாளர் மகேஸ்வரன் உத்தரவின் பேரில் காவல் துணை கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டு, ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டு வந்த நபரைத் தேடிவந்தனர்.

தனிப்படையினர் சம்பவ இடத்தில் கிடைத்த தடயங்களை சேகரித்தும், சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டும் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவனை பிடித்தனர். அந்த சிறுவனிடம் விசாரித்ததில், 'கையில் பணமில்லாததால் தலைவலி ஏற்பட்டது. அதனால், அங்குள்ள ஏடிஎம் இயந்திரத்தை உடைத்தேன்' என தான் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையிட முயற்சித்ததை ஒப்புக்கொண்டார்.

சம்பவம் நடைபெற்ற ஏழு மணி நேரத்தில் குற்றவாளியை பிடித்த தனிப்படையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் பாராட்டினார்.

இதையும் படிங்க: தொடர் திருட்டில் ஈடுபட்ட ரவுடிகள் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.