ETV Bharat / state

கும்பகோணம் அருகே அடிப்படை வசதிகள்கோரி மக்கள் போராட்டம் - தஞ்சாவூர்

கும்பகோணம் அருகே முழையூர் இந்திரா நகரில் மக்கள் குடியிருக்கும் சேதமடைந்த குடியிருப்புகளை சீரமைத்துத் தரக் கோரியும், அடிப்படை வசதிகள் அமைத்து தரக்கோரியும் அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அடிப்படை வசதிகள் கோரி மக்கள் போராட்டம்
அடிப்படை வசதிகள் கோரி மக்கள் போராட்டம்
author img

By

Published : Dec 25, 2022, 8:01 PM IST

அடிப்படை வசதிகள் கோரி மக்கள் போராட்டம்

தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே ஆரியப்படைவீடு ஊராட்சிக்குட்பட்ட, முழையூர் இந்திரா நகரில், 35 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட, 125 தொகுப்பு வீடுகள் 9 தெருக்களில் உள்ளன. இவற்றில் 700-க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இந்திரா நகரில் உள்ள சாலைகள் அனைத்தும் பள்ளத்தில் அமைந்துள்ளதால், மழைக்காலங்களில் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது.

எனவே, இந்த தெருக்களை மேம்படுத்தி, புதிய சாலை அமைத்திடவும், உரிய தெரு மின்விளக்குகள் அமைத்திடவும், பெரும்பாலான தொகுப்பு வீடுகள் வலுவிழந்து காணப்படுவதால், அவற்றை சீரமைத்திடவும், பராமரிப்பின்றிக் கிடக்கும் சமுதாயக் கூடம் மற்றும் பொது கழிவறையை சுத்தம் செய்து புதுப்பித்து தரவும், ஆதிதிராவிடர் இடுகாட்டிற்கும் செல்லும் சாலையை சீரமைத்து தரவும் வேண்டி இப்பகுதி மக்கள், குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கையில் கோரிக்கை பதாதைகளை ஏந்தி, கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தஞ்சை மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும், விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு, அடிப்படை வசதிகளை உடனடியாக மேம்படுத்தித் தர வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: பங்குச்சந்தையில் அதிகம் லாபம்; ஆசைகாட்டி மருத்துவரிடம் ரூ.1.74 கோடி ஆட்டையை போட்ட இளம்பெண்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.