கரோனா வைரஸ் பரவுதலை தடுக்கும் விதமாக தமிழ்நாடு அரசு 144 தடை உத்தரவை அறிவித்துள்ளது. இந்தத் தடையின்போது அத்தியவாசிய பொருட்கள் கிடைக்கும் என்று அரசு தெரிவித்திருந்தாலும், ஒரே நாளில் அனைத்து பொருட்களையும் வாங்கி குவிப்பதில் மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
அந்த வகையில், தஞ்சாவூரில் திருக்காட்டுப்பள்ளி கடைவீதி, மார்க்கெட் பகுதிகளில் பொருட்களை வாங்க அதிகளவில் மக்கள் குவிந்தனர். இதனால், அப்பகுதியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
மேலும், காய்கறிகளின் விலையும் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதால் வேறுவழியின்றி வாங்கிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: கரோனா எதிரொலி: திருச்சி மத்திய சிறையில் கைதிகள் விடுவிப்பு