கரோனா வைரஸ் உலக மக்களை அச்சுறுத்தி வரும் வேலையில் தமிழ்நாட்டில் அதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது குறிப்பாக தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா வில் இதுவரை 475-க்கும் மேற்பட்டோர் கரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
பட்டுக்கோட்டை நகரத்தில் மட்டும் இதுவரை 303 பேர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 6 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையத்தில் பணி புரிய கூடிய அலுவலர் ஒருவருக்கு இன்று (ஆகஸ்ட் 17) கரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் மற்றும் அஞ்சலக கண்காணிப்பாளர் அலுவலகம் பூட்டப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து நகராட்சி தூய்மை பணியாளர்கள் அந்த பகுதி முழுவதும் கிருமிநாசினி தெளித்தனர். இரண்டு நாட்களுக்கு தலைமை தபால் நிலையத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தலைமை தபால் நிலைய அலுவலருக்கு கரோனா - பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம்
தஞ்சாவூர்: பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையத்தில் பணிபுரியும் அலுவலர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து தபால் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.