ETV Bharat / state

’தஞ்சை கோயிலில் சமஸ்கிருதத்தில் குடமுழுக்கு நடத்துவதை மன்னிக்கவே முடியாது’

தஞ்சாவூர்: தஞ்சை பெரிய கோயிலில் சமஸ்கிருதத்தில் குடமுழுக்கு நடத்துவதை ஒருபோதும் மன்னிக்கவே முடியாது என்று பழ. நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

nedumaran
nedumaran
author img

By

Published : Jan 31, 2020, 9:47 AM IST

தஞ்சையில் தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திடம் பேசுகையில், “தஞ்சை கோயில் குடமுழுக்கை தமிழில் நடத்த வேண்டும் என்று கேட்க வேண்டிய நிலைமையில் தமிழர்களாக நாம் இருப்பது வருந்தத்தக்கதாகும். ஏனென்று சொன்னால் கட்டிய மன்னன் தமிழன், கட்டிய சிற்பிகள் தமிழர்கள், தமிழ் மன்னனால் சோழ மண்ணின் தலைநகர் தஞ்சையில் இந்தக் கோயில் கட்டப்பட்டது.

தமிழ் மண்ணில் கட்டப்பட்ட தஞ்சை கோயிலில் சமஸ்கிருதத்தில் குடமுழுக்கு நடத்துவது மன்னிக்க முடியாததாகும், இதனை ஒருபோதும் ஏற்கமுடியாது. தஞ்சையில் நடைபெறும் குடமுழுக்கு மட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதும் உள்ள கோயில்களில் நடத்தப்படும் குடமுழுக்குகள், அர்ச்சனைகள் தமிழில்தான் இருக்க வேண்டும், தமிழில் மட்டுமே நடத்தப்பட வேண்டும்.

பழ.நெடுமாறன், தமிழர் தேசிய முன்னணியின் தலைவர்

இந்தக் கோயில்கள் கட்டப்பட்டதற்கும், வடமொழியைச் சேர்ந்தவர்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இக்கோயில்கள் தமிழ்நாட்டின் ஆகம விதிப்படி கட்டப்பட்டவை. சமஸ்கிருத வேதங்களின்படி இது கட்டப்பட்டவை அல்ல. வடமொழியில் அர்ச்சனை, குடமுழுக்கு செய்வதை தமிழர்களால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது” என்றார்.

இதையும் படிங்க: தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலை ஆய்வுசெய்த டிஜிபி சைலேந்திர பாபு

Intro:
தஞ்சாவூர் ஜன 31

தஞ்சை கோவிலில் சமஸ்கிருதத்தில் குடமுழுக்கு நடத்துவது மன்னிக்க முடியாததாகும், இதனை ஒருபோதும் ஏற்கமுடியாது பழ.நெடுமாறன் கருத்துBody:

ஈழந்தில் இருந்து கிருஷ்ணா ஆத்து நதிகரைவரை ஒரு மாபெரும் பேரரசை நிறுவிய ராஜா ராஜா பெரு மன்னன் கட்டிய தஞ்சாவூர் பெருங் கோவிலில் குடமுழுக்கு நடக்க இருக்கிறது,
குடமுழுக்கை தமிழில் நடத்த வேண்டும் என்று கேட்க வேண்டிய நிலைமையில் தமிழர்களாக நாம் இருப்பது வருந்தத்தக்கதாகும் ஏனென்று சொன்னால் கட்டிய மன்னன் தமிழன் கட்டிய சிற்பிகள் தமிழர்கள் எங்கே கட்டினார்கள் சோழ மன்னனின் தலைநகர் தஞ்சையில் கட்டப்பட்டது தமிழ் மன்னனால் , தமிழ் சிற்பிகளால் தமிழர்களால் தமிழ் மண்ணில் கட்டப்பட்ட தஞ்சை கோவில் சமஸ்கிருதத்தில் குடமுழுக்கு நடத்துவது மன்னிக்க முடியாததாகும், இதனை ஒருபோதும் ஏற்கமுடியாது தஞ்சையில் நடைபெறும் குடமுழுக்கு மட்டுமல்ல தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் நடத்தப்படும் குடமுழுக்குகள் அர்ச்சனைகள் தமிழில்தான் இருக்க வேண்டும் தமிழில் மட்டுமே நடத்தப்பட வேண்டும், ஏனென்றால் கோவில்கள் கட்டப்பட்டு இருக்கும் வடமொழி யாருக்கும் எந்த தொடர்பும் இல்லை, அவர்களுக்கும் இந்தக் கோவிலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை இக்கோவில்கள் தமிழ்நாட்டின் ஆகம விதிப்படி கட்டப்பட்டவை சமஸ்கிருத வேதங்களின்படி இது கட்டப்பட்டவை இல்லை ஆகவே செய்வா ஆகமவிதிப்படி கட்டப்பட்டுள்ள இந்தக் கோவில்களில் வடமொழியில் குடும்பத்திலிருந்தும் அர்ச்சனை செய்வதும் தமிழர்களால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என பழ.நெடுமாறன் தெரிவித்தார்
Conclusion:Sudhakaran 9976644011
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.