தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகேயுள்ள திருமங்கலக்கோட்டை கீழையூர் கிராமத்தில் வசிக்கும் சிங்கார வடிவேலன் - அகிலா தம்பதியின் மகன் மோகன்(7), கரோனா தொற்று குறித்த விழிப்புணர்வு இல்லாமல் ஆங்காங்கே சுற்றித் திரியும் தனது ஊர் மக்களுக்கு இலவச முகக் கவசங்களை வழங்கியுள்ளார்.
மேலும், கரோனா வைரஸ் உருவம் போன்ற ஹெல்மெட்டை அணிந்து காய்கறிக்கடை, மளிகைக்கடை என கிராமத்தின் மக்கள் கூடும் இடங்களுக்குச் சென்று மக்களுக்கு கிருமி நாசினிகள் வழங்கினார். மேலும், கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தப்படுத்தும் முறை குறித்தும் தொற்றிலிருந்து எவ்வாறு தங்களை காத்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
இந்தச் சிறுவனின் செயலை அப்பகுதி மக்கள் வெகுவாகப் பாராட்டினர். கடந்த சில தினங்களுக்கு முன்பு தஞ்சாவூர் ஆட்சியரிடம் தான் இரண்டு ஆண்டுகளாக சேமித்து வைத்திருந்த உண்டியல் சேமிப்பு பணம் ரூ. 2 ஆயிரத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு இந்த சிறுவன் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மக்களின் உயிர் காக்கும் மருத்துவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் - வைகோ