ETV Bharat / state

'நாங்கள் இல்லாமல் அதிமுகவை எந்த கொம்பனாலும் வழிநடத்த முடியாது' - ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம்

பொதுக்குழு கூட்டம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், ''நாங்கள் இல்லாமல் எந்த கொம்பனாலும் அண்ணா திமுகவை வழிநடத்த முடியாது. அது எடப்பாடி கொம்பனாலும் முடியாது'' என ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் விமர்சித்துள்ளார்.

Etv Bharat செய்தியாளர்களைச் சந்தித்த வைத்தியலிங்கம்

author img

By

Published : Feb 23, 2023, 6:59 PM IST

Updated : Feb 23, 2023, 8:31 PM IST

'நாங்கள் இல்லாமல் அதிமுகவை எந்த கொம்பனாலும் வழிநடத்த முடியாது' - ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம்

தஞ்சாவூர்: அதிமுகவில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லும் எனவும்; அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக ஈபிஎஸ் தேர்வு பெற்றது செல்லும் என்றும்; ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை நீக்கியது செல்லும் என்றும் நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர். இதில், நீக்கப்பட்டவர்களில் தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளரும், ஒரத்தநாடு சட்டப்பேரவை தொகுதி அதிமுக எம்எல்ஏவுமான வைத்திலிங்கமும் ஒருவர், இவர் அதிமுகவில் துணை ஒருங்கிணைப்பாளராகவும் பதவி வகித்து வந்தார்.

ஈபிஎஸ், ஓபிஎஸ் என இரு அணிகளாக பிரிந்தபோது ஓபிஎஸ் அணியில் இணைந்தார். பின்னர், பொதுக்குழு கூட்டத்தில்
ஓபிஎஸ் ஆதரவாளரான இவர் நீக்கப்பட்டார். இந்நிலையில், பொதுக்குழு வழக்கு தொடர்பாக இன்று கூறப்பட்ட உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று தஞ்சாவூரில் அதிமுக முன்னாள் மேயர் சாவித்திரி கோபால் தலைமையில் தஞ்சை ரயிலடி பகுதியில் உள்ள முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா உருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் மேயர் சாவித்திரி கோபால் கூறும்போது, “தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் , இறுதியில் மறுபடியும் தர்மம் வெல்லும், அதிமுக அடிப்படை தொண்டர்களுக்கு கிடைத்த வெற்றி, தீய சக்திகளின் தீய திட்டங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த தீர்ப்பு அமைந்துள்ளது, தொண்டர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது” எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து, இந்த தீர்ப்பு குறித்து ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் கூறுகையில், ''இந்த தீர்ப்பு ஒன்றும் எங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தவில்லை. உயர் நீதிமன்றம் சொன்னதை, உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இந்த தேர்தலில் மட்டுமே இரட்டை இலை சின்னத்தை அவர்கள் பயன்படுத்த முடியும்‌. அடுத்த தேர்தலில் அவர்கள் பயன்படுத்த முடியாது. சிவில் கோர்ட்டு நீதிமன்றத்தின் கருத்துக்கு பொருந்தாது.

அதனால், எங்களுக்கு பாதிப்பு இருக்காது. எனவே இதே நிலை தொடரும். இரட்டை இலைச் சின்னம் இந்த தேர்தலோடு சரி, பின்னர் யாருக்கு சொந்தம் என நீதிமன்றம் தான் முடிவு செய்யும். நாங்கள் இல்லாமல் எந்த கொம்பனாலும் அண்ணா திமுகவை வழிநடத்த முடியாது. அது எடப்பாடி பழனிசாமி என்னும் கொம்பனாலும் முடியாது'' எனத் தெரிவித்தார்.

மேலும், இந்த தீர்ப்பு குறித்து பல்வேறு தரப்பினரும் கூறுவது தொடர்பான கேள்விக்கு, ''இந்த தீர்ப்பை பற்றி தெரியாமல் சில அறிவிலிகள் பேசுவதற்கு பதில் கூற முடியாது. அறிவாளிகள் பேசினால் கூற முடியும். இப்படி பேசுபவர்கள் அறிவிலிகள்'' எனப் பதிலளித்தார்.

இதையும் படிங்க: 'ஈரோடு தேர்தலில் வெற்றி உறுதி... ஓபிஎஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டது நீக்கப்பட்டது தான்' - ஈபிஎஸ் தடாலடி

Last Updated : Feb 23, 2023, 8:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.