தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பழைய மீன் மார்க்கெட் அருகே திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள், அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் தேசிய குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பாலபாரதி கலந்துகொண்டார். திமுக சார்பில் கும்பகோணம் சட்டப்பேரவை உறுப்பினர் சாக்கோட்டை அன்பழகன், தமுமுக மாநில பொதுச்செயலாளர் ஹாஜா கனி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மண்டல பொறுப்பாளர் விவேகானந்தன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டு தேசிய குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.
இக்கூட்டத்தில் பேசிய பாலபாரதி, தமிழ்நாட்டில் தேசிய குடியுரிமை பதிவுசெய்யப்படாது என்ற உறுதியை தமிழ்நாடு முதலமைச்சர் அளிக்காவிட்டால், அடுத்து சட்டப்பேரவை கூடும்போது கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் நடத்த முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: சி.ஏ.ஏ. எதிர்ப்பு: 650 அடி தேசிய கொடி ஏந்தி இஸ்லாமியர்கள் பேரணி