தஞ்சாவூர்: கும்பகோணம் மடத்துத்தெருவில் செயல்பட்டு வரும் கேஎஸ் என்ற தனியார் மருத்துவமனையில் 2வது தளத்தில் உள்ள வரவேற்பறை மேஜையில் பாலக்கரை பகுதியை சேர்ந்த சரண்யா என்ற பணியிலிருந்த செவிலியர் தனது கைப்பேசியை வைத்து விட்டு நோயாளிகளைக் கவனிக்கச் சென்றுள்ளார். பின்னர் திரும்பி வந்து பார்த்த போது அவரது செல்போன் திருடப்பட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதனைத் தொடர்ந்து அங்குப் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து பார்த்தபோது மர்ம நபர் ஒருவர் வந்து கைபேசியை திருடிச் செல்லும் காட்சிப் பதிவாகியுள்ளது. இது குறித்து கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து சிசிடிவியில் பதிவான காட்சிகளைக் கொண்டு வழக்குப் பதிவு செய்து மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
எப்போது பரபரப்பாகக் காணப்படும் தனியார் மருத்துவமனையில் புகுந்து நபர் ஒருவர் செல்போனை திருடிச் சென்ற சம்பவம் கும்பகோணம் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 10, 11, 12 ஆம் வகுப்பு செய்முறை தேர்வில் மாற்றம்: அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு