ETV Bharat / state

உரம் ஏற்றி வந்த லாரி மோதியதில் முதியவர் உயிரிழப்பு! - தமிழ் விபத்து செய்திகள்

தஞ்சாவூர்: உரம் ஏற்றி வந்த லாரி மோதிய விபத்தில் 75 வயது முதியவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

old-man-dies-in-collision-with-fertilizer-truck

author img

By

Published : May 22, 2020, 10:32 PM IST

தஞ்சாவூர் மாவட்டம் தொம்பன் குடிசை பகுதியைச் சேர்ந்தவர் ராஜப்பா (75). இவர் தஞ்சையில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் கேண்டினில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் வீட்டிற்கு தேவையான பொருள்கள் வாங்குவதற்காக தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

பின், பொருட்களை வாங்கிவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த ராஜப்பா, தஞ்சை - நாகப்பட்டினம் சாலையில், தொம்பன்குடிசை அருகே சென்று கொண்டிருந்தபோது, பின்னால் உரம் ஏற்றி வந்த லாரி மோதியதில், லாரியின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதையடுத்து தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் உடலைக் கைப்பற்றி தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்காக அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து தஞ்சை கிழக்கு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: சாரைப் பாம்பை வெட்டி கோயில் வேல் கம்பியில் குத்திய குடிமகன்! நடந்தது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.