தஞ்சாவூர் மாவட்டம், பாதாளச் சாக்கடையில் ஏற்படும் அடைப்பினை அகற்ற எண்ணெய், இயற்கை எரிவாயுக் கழகம் சார்பாக தஞ்சாவூர் மாநகராட்சிக்கு வழங்கப்பட்ட பண்டிக்கூட் எனும் ரோபோவை மாவட்ட ஆட்சித்தலைவர் அண்ணாதுரை தொடங்கி வைத்தார்.
அதன்பின் பேசிய அவர், எண்ணெய், இயற்கை எரிவாயுக் கழகம் சார்பில் தஞ்சாவூர் மாநகராட்சி பகுதி பாதாளச் சாக்கடையில் ஏற்படும் அடைப்பை அகற்றிட ரூ.48.40 இலட்சம் மதிப்பீட்டில் பண்டிக்கூட் எனப்படும் ரோபோ இயந்திரக் கருவி வழங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் துப்புரவு பணியாளர்கள் பாதாள சாக்கடைக்குள் இறங்கி அடைப்புகளை சரி செய்வது தவிர்க்கப்படுவதால் விஷவாயு விபத்துகள், உயிரிழப்புகள் ஏற்படாது. இது தஞ்சாவூர் மாநகராட்சியில் ஒரு புதிய சாதனையாகும். பண்டிக்கூட் ரோபோ பயன்பாட்டின் மூலம் தஞ்சாவூர் மாநகராட்சியில் பாதாளச் சாக்கடை இணைப்பு பெற்றுள்ள சுமார் 23,653 குடும்பத்தினர் பயன்பெறுவர் என்று கூறினார் .
இதையும் படிங்க: பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான நிலுவையிலுள்ள பாலியல் குற்ற வழக்கை விரைந்து முடிக்க உத்தரவு