தஞ்சை மாவட்டம் கடற்கரைப் பகுதிகளான தம்பிக்கோட்டை, அதிராம்பட்டினம், மல்லிப்பட்டினம், சேதுபாவாசத்திரம், அண்ணாநகர், புதுத்தெரு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடி தொழிலை நம்பி உள்ளனர்.
ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டிருந்த நிலையிலும், மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்று வந்தனர்.
ஆனால், மீனவர்கள் கூட்டம் கூட்டமாகச் செல்வதால் கரோனா வைரஸ் பரவ வாய்ப்புள்ளதால் அவர்கள் கடலுக்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதனால், எந்நேரமும் பரபரப்பாக காணப்படும் துறைமுகப் பகுதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
இதையும் படிங்க: பெங்களூரில் காவலரைத் தாக்கிய இளைஞர்கள்... 144 தடையை மீறியதில் தகராறு!