ETV Bharat / state

நெருங்கும் மாட்டுப்பொங்கல்.. நெட்டி மாலை தயாரிப்புகள் தீவிரம் - அரசுக்கு விடுக்கும் கோரிக்கை என்ன? - plastic maalai

Netti Maalai: கால்நடைகளுக்கு அணியப்படும் நெட்டி மாலைகள் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது எனவும், நெட்டி மாலை தயாரிப்பாளர்களின் கோரிக்கைகள் பற்றியும் சுருக்கமாக விவரிக்கிறது இந்த சிறப்பு செய்தித் தொகுப்பு.

Netti Maalai
அழிந்து வரும் நெட்டி மாலைத் தொழிலை உயிர்பிக்க நடவடிக்கை எடுக்க அரசிடம் கோரிக்கை
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 2, 2024, 5:25 PM IST

தஞ்சாவூர்: ஆண்டுதோறும் தை 2ஆம் நாள் மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுகிறது. மாட்டுப்பொங்கல் அன்று கால்நடைகளை குளிப்பாட்டி அழகுபடுத்தி, பொங்கல் வைத்து படைத்து, அதனை கால்நடைகளுக்கு வழங்குவர். இந்நாளில் கால்நடைகளின் கழுத்துகளை அலங்கரிக்க, பல வண்ணங்களில் நெட்டிகளால் செய்யப்படும் அழகிய மாலைகளை அணிவித்து அழகூட்டுவது வழக்கம்.

இவ்வகை நெட்டி மாலைகள், கும்பகோணம் அருகே திப்பிராஜபுரம் கிராமத்தில் சுமார் 20க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் மூன்று தலைமுறைகளுக்கும் மேலாக தயார் செய்து வருகின்றனர். இதற்காக தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், சீர்காழி, கொள்ளிடம், திருவாரூர், முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி ஆகிய பகுதிகளில் உள்ள ஏரி, குளங்களில் இயற்கையாக வளரும் பச்சை பசேல் என உயரமாக தக்கையைப் போன்று இலகுவாக இருக்கும் நெட்டிச்செடிகளைப் பறித்துக் கொண்டு வருவர்.

பின்னர், அதன் பச்சை மேல் தோலை கத்தியால் சீவி, வெயிலில் காய வைத்து உலர்த்தி, அதனை 2 மற்றும் 3 இன்ச் அளவுகளில் நீள வாக்கிலும், தட்டையாகவும் நறுக்கி, அதில் அழகிய பூக்களையும் தயார் செய்வர். பின், அதனை ஒன்றரை அடி நீள மாலையாக தாழம் நார் கொண்டு கோர்ப்பர்.

குறைந்தபட்சம் மாலை ஒன்று ரூ.10க்கும், வேலைப்பாடு கொண்ட மாலை ரூ.12க்கும், மிகுந்த வேலைப்பாடு மற்றும் அழகிய பல வண்ண பூக்களைக் கொண்ட மாலைகள் ரூ.15க்கும் விற்பனைக்காக தயார் செய்கின்றனர். இந்த நெட்டி மாலை தயார் செய்யும் பணிகள் ஐப்பசி முதல் மார்கழி வரை மூன்று மாதங்களுக்கு நடைபெறும்.

மார்கழி மாத இறுதி வாரத்தில், விற்பனை சூடு பிடிக்கத் தொடங்கி, மாட்டுப் பொங்கல் அன்று நிறைவு பெறும். இதனை தஞ்சை, திருவாரூர், நாகை, காரைக்கால் ஆகிய மாவட்டங்களுக்கு விற்பனைக்காக அனுப்புவது வழக்கம். இம்மூன்று மாதங்களிலும் 20 குடும்பங்களைச் சார்ந்த 60க்கும் மேற்பட்டோர் இணைந்து செய்கின்றனர். இது பருவகால தொழில் என்பதால், மாட்டுப் பொங்கலுக்குப் பிறகு, இக்குடும்பத்தினர் வழக்கமான தங்களது விவசாயக் கூலி வேலைகளை கவனிக்கத் தொடங்கி விடுவதாக கூறப்படுகிறது.

இது குறித்து ஈடிவி பாரத் செய்திகளிடம் பேசிய நெட்டி மாலை தயாரிப்பாளர் சுந்தரமூர்த்தி, “தற்போது சந்தையில் பல வண்ண பிளாஸ்டிக் மாலைகள் விற்பனைக்கு வந்துள்ளதாலும், பொதுவாக கால்நடைகளின் எண்ணிக்கை ஆண்டிற்கு ஆண்டு குறைந்து கொண்டே வருவதால், நெட்டி மாலை விற்பனையும் குறைந்து வருகிறது.

இந்த ஆண்டு பல இடங்களில் குளங்கள் தூர் வாரப்பட்டதாலும், நூறு நாள் பணிகளில் குளங்களை சீரமைக்கும்போது, பச்சை நெட்டிகளையும் களையைப் போல அகற்றி விடுவதாலும், பொக்லைன் இயந்திரம் கொண்டு தூர்வாரப்படுவதாலும், மாலை தயார் செய்வதற்கான நெட்டிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

அதற்கு ஏற்றார்போல, இதற்கான தேவையும் ஆண்டிற்கு ஆண்டு கால்நடைகள் குறைவிற்கு ஏற்ப எண்ணிக்கைகள் குறைவதால், தற்போது இத்தொழிலை போதுமான அளவிற்கு உற்சாகமின்றி, பாரம்பரியமான தொழில் என்ற ரீதியில் வேறு வழியின்றி, தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றது.

எனவே, தமிழக அரசு அழிவின் விளிம்பிற்கு சென்றுள்ள இந்த பாரம்பரியமிக்க குடிசைத் தொழிலை மீட்க கடனுதவி அளித்து, தொழில் மேம்பட உதவிட வேண்டும் என விரும்புகின்றனர். இயற்கைக்கும், கால்நடைகளின் உயிருக்கே உலைவைக்கும் கண்ணைக் கவரும் பிளாஸ்டிக் மாலைகளை தடை செய்வதன் மூலம் இத்தொழிலை தொடர்ந்து உயிர்பித்து தளைக்க வைக்க முடியும்” என்று கூறினார்.

இதையும் படிங்க: அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு காட்பாடியில் உற்சாக வரவேற்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.