தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலையில் மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் தலைமையில் புதிய கால்நடை மருத்துவமனையை வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு குத்துவிளக்கேற்றி இன்று திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கூறுகையில், "தூர்வாரும் பணிகள் 95 விழுக்காடு நிறைவு பெற்றுள்ளது. எஞ்சிய பணிகள் இன்னும் ஓரிரு தினங்களில் முடிவடையும். விவசாயிகளின் தேவைக்கு அதிகமாகவே விதைகள், உரங்கள் உள்ளிட்ட இடுபொருள்கள் கையிருப்பு உள்ளன.
வேளான் கடன்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது மேலும் பத்தாயிரம் கோடி ரூபாய் அளவுக்கு விவசாய கடன் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்" என்றார்.