ETV Bharat / state

மாதா ஆலயத்தில் கீரிடம், நெக்லஸ் திருட்டு - போலீஸ் வலைவீச்சு! - near thanjai church Madha crown theft case

தஞ்சாவூர்: திருக்காட்டுப்பள்ளி அருகே பூண்டி மாதா ஆலைய மாதாவின் கீரிடம், நெக்லஸ் உள்ளிட்டவற்றை திருடிய நபரை சிசிடிவி காட்சிகளைக் கொண்டு காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

பூண்டி மாதா
author img

By

Published : Sep 28, 2019, 10:14 PM IST

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள அலமேலுபுரம் பூண்டியில் உள்ள பூண்டி மாதா ஆலயத்தில் கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் பசிலிக்கா எனப்படும் புனித தலம் உள்ளது. மாதாவிற்கு தங்கத்தில் கிரீடமும், செபமாலையும் அணிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக இரவு வழிபாடு முடிந்து ஆலயத்தின் கதவுகள் அனைத்தும் பூட்டப்பட்டு மறுநாள் காலை திறக்கபடும்.

இந்நிலையில் நேற்று அதிகாலை வழிபாட்டிற்காக ஆலயத்தின் கதவுகள் திறக்கப்பட்டபோது, மாதா சொரூபம் வைக்கப்பட்டிருந்த இடத்தின் கதவுகள் திறந்து கிடந்ததை கண்ட ஆலய பாதுகாவலர் இது குறித்து ஆலயத் தலைவர் பாக்கியசாமி, துணைத் தலைவர் அலபோன்ஸ் ஆகியோரிடம் தெரிவித்துள்ளார்.

இருவரும் சம்பவ இடத்திற்கு சென்ற பார்வையிட்டனர். அப்போது மாதாவின் தலையில் இருந்த தங்க முலாம் பூசப்பட்ட கிரீடமும், கழுத்தில் இருந்த நான்கு பவுன் நெக்லஸூம், கையிலிருந்த மூன்றரை பவுன் தங்க செபமாலையும் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

இது குறித்து திருக்காட்டுப்பள்ளி காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஆய்வாளர் கென்னடி, சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டார்.

பின் சிசிடிவி கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டதில் தனி நபர் ஒருவர் கடந்த 26ஆம் தேதி ஆலயத்தில் சந்தேகம்படும் வகையில் நடமாடியது கண்டுபிடிக்கப்பட்டது. வழிபாட்டின்போது அவர் ஆலயத்தின் உள்ளே புகுந்து பாதிரியார்கள் உடை மாற்றும் அறையில் ஒளிந்ததுகொண்டு மேராக்களை துணி போட்டு மூடியதும் தெளிவாக பதிவாகியிருந்தது.

ஆனால் அந்த நபர் வெளியே செல்லும் காட்சிகள் இல்லை. இதையடுத்து தஞ்சை கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் எடுக்கப்பட்டன. இதனையடுத்து சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் அந்த நபரை தேடிவருகின்றனர்.

மேலும் படிக்க: செம்மரக்கட்டையுடன் பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்!

Intro:
தஞ்சாவூர்,செப்.28–

திருக்காட்டுபள்ளி அருகே பூண்டி மாதா சர்ச்சில் உள்ளே புகுந்த மர்ம நபர், இரவு முழுவதும் உள்ளிருந்த நிலையில், மாதாவிற்கு அணியப்பட்டிருந்த கீரிடம்,நெக்லஸ் மற்றும் செபமாலையை திருடி சென்றுள்ளார்Body:
தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள அலமேலுபுரம் பூண்டியில் உள்ள பூண்டி மாதா சர்ச் கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் பசிலிக்கா எனப்படும் புனித தலமாகும்.
இத்தலம் கி.பி.,1858 ல் பிரான்ஸ் நாட்டின் லுார்து நகரில் மரியன்னை பெர்நதெத் என்ற சிறுமிக்கு காட்சியத்து,நாமே அமலோற்பவம் என்று அறிவித்து மக்களை செபமாலை செபிக்க கேட்டுக்கொண்டார்.அதே ஆண்டு பாரிசில் உள்ள அந்திய வேதபோதக சபை குருக்களால் மூன்று லுார்து மாதாத சொரூபங்கள் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டு அதில் ஒன்று பூண்டி சர்ச்சில் நிறுவப்பட்டு பூலோகம் போற்றும் பூண்டி புதுமை மாதா என்ற போற்றப்பட்டு வருகிறது. மாதாவிற்கு தங்கத்திற்கு கிரீடமும்,செபமாலையும் அணிவிக்கப்பட்டுள்ளது.வழக்கமாக இரவு வழிபாடு முடிந்து சர்ச்சின் கதவுகள் அனைத்தும் பூட்டப்பட்டு வருகிறது. அதுபோல வழிபாடு முடிந்து சர்ச்சின் கதவுகள் அனைத்தும் மூடப்பட்டது. இந்நிலையில் அதிகாலை வழிபட்டிற்காக சர்ச் கதவுகள் திறக்கப்பட்ட போது, மாதா சொரூபம் வைக்கப்பட்டிருந்த இடத்தின் கதவுகள் திறந்து கிடந்தது. இதனை பார்வையிட்ட சர்ச் பாதுகாவலர் டேவிட், இது குறித்து சர்ச் அதிபர் பாக்கியசாமி மற்றும் துணை அதிபர் அலபோன்ஸ் ஆகியோரிடம் கூறினார். இதையடுத்து இருவரும் சம்பவ இடத்திற்கு சென்ற பார்வையிட்டனர். அப்போது மாதாவின் தலையில் இருந்த தங்க முலாம் பூசப்பட்ட கிரீடமும், கழுத்தில் இருந்த 4 பவுன் நெக்லஸூம், கையிலிருந்த மூன்றரை பவுன் தங்க செபமாலை என மூன்றும் திருடு போகி நிலையில், மேலும் வெளிக்கதவுகள் எதுவும் உடைக்கப்படவில்லை.
இந்நிலையில், தங்கமுலாம் பூசப்பட்ட கிரீடம் பக்தர் ஒருவரால்,கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு காணிக்கையாக வழங்கப்பட்டதால்,அதன் மதிப்பு விபரங்கள் தெரியவில்லை என சர்ச் அதிபர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து திருக்காட்டுபள்ளி போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. விசாரணையில்,சர்ச்சில் உள்ள சி.சி.டி.வி.,கேமராக்களை பார்த்த போது, மர்ம நபர் ஒருவர் கடந்த 26ம் தேதி சந்தேகத்திற்கு இடமாக நடமாடியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர் வழிபாட்டின் போது சர்ச்சின் உள்ளே புகுந்து பாதிரியார்கள் உடை மாற்றும் அறையில் ஒளிந்ததும்,மேராக்களை துணி போட்டு மூடியதும் தெளிவாக தெரியவந்துள்ளது. ஆனால் அதன் அந்த மர்மநபர் வெளியே செல்லும் காட்சிகள் இல்லை. தொடர்ந்து இன்ஸ்பெக்டர் கென்னடி,சம்பவ இடத்தை பார்வையிட்டார். தஞ்சை கைரேகை நிபுணர்கள் தடயங்களை பதிவு செய்தனர்.மர்ம நபரை தேடி வருகின்றனர்.Conclusion:Tanjore sudhakaran 9976644011
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.