ETV Bharat / state

எலும்பு மூட்டு வாரம்: எலும்பு மூட்டுச் சிதைவு நோய் குறித்து விழிப்புணர்வு! - National Bone and Joint day awareness

தஞ்சாவூர்: எலும்பு மூட்டு வாரத்தையொட்டி இந்திய எலும்பியல் சங்கத்தின் சார்பாக எலும்புக் குறைபாடு வராமல் தடுக்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

National Bone and Joint
National Bone and Joint National Bone and Joint
author img

By

Published : Aug 6, 2020, 6:35 PM IST

இந்திய எலும்பியல் சங்கத்தின் சார்பாக ஆண்டுதோறும் ஆகஸ்ட் 1 முதல் 7ஆம் தேதி வரை எலும்பு மூட்டு வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது. அந்த வகையில், இந்தாண்டிற்கான கருப்பொருளாக எலும்பு மூட்டுச் சிதைவு நோயினால் ஏற்படும் குறைபாடுகளைத் தடுப்பது குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகள் வாரம் முழுவதும் நடைபெற்றுவருகிறது.

அதன் பொருட்டு, தமிழ்நாடு எலும்பியல் சங்கம் மற்றும் தஞ்சை ஆர்த்தோ கிளப் சார்பாக இன்று (ஆகஸ்ட் 6) பட்டுக்கோட்டையில் எலும்பு மூட்டுச் சிதைவு நோயினால் ஏற்படும் குறைபாடுகளை எவ்வாறு தடுப்பது என்பது குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

எலும்பு மூட்டுச் சிதைவு நோயின் விளைவுகளையும், அதனைத் தடுக்கும் வழிமுறைகளையும் தமிழ்நாடு எலும்பியல் சங்கத்தின் இணைச் செயலாளர் மருத்துவர் இரவி, மருத்துவர் சின்னதுரை ஆகியோர் எடுத்துரைத்தனர்.

இதையும் படிங்க: உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பரப்புரை ஆட்டோவை தொடங்கி வைத்த முதலமைச்சர் நாராயணசாமி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.