தஞ்சாவூர்: கும்பகோணம் அருகேவுள்ள நாச்சியார்கோவில் அரசு மருத்துவமனையில் நேற்றிரவு (ஜூலை 20) செவிலி மஞ்சுளா ஜெயக்குமார் (50) பணியில் இருந்தார். அப்போது, மருத்துவமனைக்கு வந்த போதை ஆசாமி ஒருவர் திடீரென அவரைத் தாக்கி, கழுத்தை நெரிந்து, முடியைப் பிடித்து இழுத்து ரகளையில் ஈடுபட்டார்.
இதனால் வலியால் கூச்சலிட்ட மஞ்சுளாவைக் காப்பாற்ற மற்றொரு அறையில் இருந்து ஓடிவந்து மருத்துவப்பணியாளர் சதாசிவத்தை (40) போதை ஆசாமி ஆத்திரத்தில் பாட்டிலால் குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் சதாசிவம் கீழே சாய்ந்தார்.
உடனடியாக அங்கிருந்தவர் போதை ஆசாமியை தடுத்து நிறுத்தினர். பின்னர், கத்தியால் குத்து வாங்கிய சதாசிவத்தை மேல் சிகிச்சைக்ககாக கும்பகோணம் அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அவர் அங்கு சிகிச்சைப் பெற்று வருகிறார்.
தாக்குதல் நடத்தியதில் போதை ஆசாமிக்கும் காயம் ஏற்பட்ட நிலையில் அவரும் கும்பகோணம் அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த காவல் துறையினர், சிகிச்சைப் பெற்று வரும் போதை ஆசாமியிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர், அப்பகுதியைச் சேர்ந்த அப்துல் ரகுமான் (40) எனத் தெரியவந்தது. தொடர்ந்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: ’தலையை வெட்டி காவல் நிலையத்திற்கு கொண்டு வருவேன்’ - மிரட்டிய இளைஞர் வீடியோ வைரல்