ETV Bharat / state

திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி திருக்கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் - வைகாசி விசாக திருவிழா

தஞ்சாவூர்: திருநாகேஸ்வரம் கிரிகுஜாம்பிகை உடனாய நாகநாத சுவாமி திருக்கோயிலில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று வெகு விமரிசியாக நடைபெற்றது.

திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி திருக்கோயில்
author img

By

Published : May 10, 2019, 9:20 AM IST

திருநாகேஸ்வரம் அருள்மிகு கிரிகுஜாம்பிகை உடனாய நாகநாத சுவாமி திருக்கோயில் திருத்தலத்தின் வைகாசி விசாகத்தை முன்னிட்டு நேற்று கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஏழாம் நாள் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. பத்தாம் நாள் சூரிய புஷ்கரணி தீர்த்தவாரியும், 16ஆம் நாள் விடையாற்றி சுவாமி அம்பாள் முத்துப் பல்லக்கில் எழுந்தருளி வீதி உலாவும் நடைபெறுகிறது. இந்து சமய அறநிலைத்துறை கோயில் நிர்வாகிகள் நிகழ்ச்சி ஏற்பாடுகள் அனைத்தையும் செய்து வருகின்றனர்.

தஞ்சாவூர் மே 09

 திருநாகேஸ்வரம் அருள்மிகு கிரிகுஜாம்பிகை உடனாய நாகநாத சுவாமி திருக்கோவில் வைகாசி விசாக கொடியேற்றம் வெகு விமர்சியாக நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்டம்
கும்பகோணத்தில் திருநாகேஸ்வரம் அருள்மிகு நாகநாத சுவாமி திருக்கோவில் உலகம் உய்யவும் சைவ நன்நெறி தழைத்தோங்கவும் சிவபரம்பொருள் திருக்கயிலைனின்று எழுந்தருளி  அருள்பாலிக்கும் செண்பகாரண்யம் என்னும் திருநாகேஸ்வரம் ஆகும் விநாயகர் பிரம்மன் இந்திரன் சூரியன் சந்திரன் ஆகிய தேவர்கள் காசிபர் பராசரர் மார்க்கண்டேயர் கௌதமர் முதலிய முனிவர்கள் நளன் பாண்டவர் சந்திரசேனன் சம்புமாலி முதலிய மன்னர்கள் வழிபட்டு நலம் பெற்ற சிறப்புடையது இத்தலம் குன்றுமுலைக் குமரியாகிய உமையம்மை திருமகளும் கலைமகளும் பணி செய்ய தவமியற்றி சிவபெருமானின் வாமபாகத்தைப் பெற்று மங்கை மங்கராகச் செய்து சக்தி பீடத்தில் எழுந்தருளி கிரிகுஜாம்பிகை இத்திருக்கோயிலாகவழிபட்ட இத்தலத்தில் நிரூதி மூலையில் தன்னிரு தேவியருடன் எழுந்தருளி நான்கு தோஷங்களை நிவர்த்தி செய்யும் நவகிரக திருத்தலமாக விளங்குகிறது இத்திருத்தலத்தின் வைகாசி விசாகத்தை முன்னிட்டு முதல் நாள் இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது தினமும் காலை மாலையில் சுவாமியும் அம்பாளும வீதியுலா இரண்டாம் நாள் சேஷ வாகனத்திலும் அம்பாள் கிளி வாகனத்திலும் மூன்றாம் நாள் பூத வாகனத்திலும் பூதகி வாகனத்திலும் நான்காம் நாள் கைலாச வாகனத்தில் காமதேனு வாகனத்தில் ஐந்தாம் நாள் ஓலைச்சப்பரம் ரிஷப வாகனத்தில் ஆறாம் நாள் யானை வாகனத்தில் அன்னபட்சி வாகனத்திலும் முக்கிய நிகழ்ச்சியான ஏழாம் நாள் திருக்கல்யாணம் எட்டாம் நாள் குதிரை வாகனம் சிம்ம வாகனத்தில் ஒன்பதாம் நாள் சுவாமி அம்பாள் புஷ்ப விமானத்தில் வீதிஉலாவும் பத்தாம் நாள் சூரிய புஷ்கரணி தீர்த்தவாரி 16ஆம் நாள் விடையாற்றி சுவாமி அம்பாள் முத்துப் பல்லக்கில் எழுந்தருளி வீதி உலா நடைபெறும் நிகழ்ச்சி ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறை கோவில் நிர்வாகிகள் அர்ச்சகர்கள் சிறப்பாகச் செய்கின்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.