ETV Bharat / state

'இந்தியாவின் சிறந்த பிரதமர் மோடி..!' - இ.யூ.முஸ்லீம் லீக் தலைவர் - காதர் மொகிதீன்

இந்தியாவின் சிறந்த பிரதமர் நரேந்திர மோடி என கும்பகோணத்தில் இன்று(டிச.15) செய்தியாளர்களை சந்தித்த இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசிய தலைவர் கே.எம். காதர் மொகிதீன் தெரிவித்துள்ளார்.

’இந்தியாவின் சிறந்த பிரதமர் மோடி..!’ - இ.யூ.முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொகிதீன்

author img

By

Published : Dec 15, 2022, 7:09 PM IST

’இந்தியாவின் சிறந்த பிரதமர் மோடி..!’ - இ.யூ.முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொகிதீன்

தஞ்சாவூர்: கும்பகோணம் தனியார் தங்கும் விடுதியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் பொதுக்குழு கூட்டம் இன்று(டிச.14) தஞ்சை வடக்கு மாவட்டத் தலைவர் முகமது சுல்தான் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கட்சியின் தேசியத் தலைவர் கே.எம்.காதர் முகைதீன் கலந்துகொண்டார்.

இக்கூட்டத்திற்கிடையே செய்தியாளர்களை அவர் சந்தித்தார். அப்போது, “நேற்று நாடாளுமன்றத்தில் சீன ராணுவம் ஊடுருவல் தொடர்பான விவாதத்தின் போது அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் திரண்டு குரல் எழுப்பின. இது எதிர்வரும் 2024ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் இணைந்து போட்டியிட போடப்பட்ட அஸ்திவாரம்.

சமூக நீதிக்கு குரல் கொடுக்கும், மதவாதத்தை புறம் தள்ளும் முற்போக்கு சிந்தனை கொண்ட கட்சிகளும் ஒன்றிணைவதால், தேசிய அளவில் 3ஆவது அணி அமைய வாய்ப்பில்லை. இந்தியாவின் சிறந்த பிரதமர் நரேந்திர மோடி. அவர் இந்திய மக்களால் நம்மால் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். அவரை நாம் அனைவரும் ஏற்றுக்கொள்ளத்தானே வேண்டும்?

அதுபோலவே, அவர் பிரதமராக இருக்கும் சமயத்தில் தான் ஜி20 அமைப்பில், அவரை முன்னிலைப்படுத்தியே இந்தியாவிற்கு தலைமை தாங்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. எனவே, இதனால் இந்தியாவிற்கும் பெருமை. இந்த பொறுப்பினால் அவருக்கும் பெருமை தான். இந்தியப் பிரதமராக மோடியை ஏற்றுக்கொண்ட போதும், அவருடன் கொள்கை ரீதியில் வேறுபாடுகள் உள்ளன.

எனவே, நல்லவை செய்யும்போது பாராட்டுவோம். தீயவை செய்யும் போது விமர்சிக்கவும் தயங்க மாட்டோம். அவரை சிறந்த பிரதமராக நாங்கள் ஏற்றுக்கொண்ட போதும், இந்திய யூனியன் முஸ்லீம் - பாஜகவுடன் ஒருபோதும் தேர்தல் கூட்டணி வைக்காது.

அதுபோலவே அந்த கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள கட்சிகளுடனும் கூட்டணி வைக்காது. இதனைக் கடந்த 89ஆம் ஆண்டு கட்சியின், பாம்பே பிரகடனத்திலேயே குறிப்பிட்டு தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். அதே பிரகடனத்தில், வழிபாட்டுத் தலங்கள் அனைத்தும் பாதுகாக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது எதிர்க்கட்சிகள் 67 சதவீத வாக்குகள் பெற்றபோதும், அவை சிதறிப்போனதால், 33 சதவீத வாக்குகள் பெற்ற பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்தது. இது 2024இல் நடக்காது, தமிழ்நாட்டில் திமுகவின் நல்லாட்சி தொடர, மு.க. ஸ்டாலினுக்கு உறுதுணையாக உதயநிதி அமைச்சரவையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அவர் பணி சிறக்க வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம். மு.க. ஸ்டாலினுக்கு இந்த வாய்ப்பு கலைஞர் 5ஆவது முறையாக முதலமைச்சராக இருந்தபோது தான் கிடைத்தது. ஆனால், உதயநிதிக்கு, ஸ்டாலின் முதன்முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்றதில் இருந்து 2ஆண்டுகளுக்குள்ளாகவே கிடைத்துள்ளது.

வருகிற மார்ச் 20ஆம் தேதி சென்னையில், இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் 75ஆவது ஆண்டு பவளவிழா மாநாடு நடைபெறுகிறது. இதில் நாடு முழுவதும் இருந்து சுமார் 2 லட்சம் பேர் வருவார்கள் என எதிர்பார்க்கிறோம், இம்மாநாட்டில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: Parliament Winter session 2022: விஜய் வசந்த் எம்.பி. வைத்துள்ள முக்கிய கோரிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.