ETV Bharat / state

'திமுக - மநீம கூட்டணி காலம்தான் பதில் சொல்லும்' - சினேகன்

தஞ்சாவூர்: "உள்ளாட்சித் தோ்தலில் திமுகவுடன் கூட்டணி சேருவது குறித்து காலம்தான் தீர்மானிக்கும்" என்று, மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் சினேகன் தெரிவித்தார்.

author img

By

Published : Jul 3, 2019, 9:01 PM IST

சினேகன்

கும்பகோணம் அருகே உள்ள திருபுவனத்தில் நேற்றிரவு மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் நன்றி அறிவிப்பும், நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் கலந்துக் கொண்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கவிஞர் சினேகன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில், "கட்சி தொடங்கிய 14 மாதங்களில் 16 லட்சம் வாக்குகள் பெற்றுள்ளோம். தற்போது கட்சியில் உள்கட்டமைப்புகளில் மாற்றம் செய்ய வேண்டியுள்ளது. பிறகு உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து முடிவெடுப்போம். விவசாயத்தை அழிக்கும் மீத்தேன், ஹைட்ரோகார்பன் போன்ற திட்டங்கள் குறித்து கட்சியின் தலைவர் கமலஹாசன், அறிக்கையாகவும், கோரிக்கையாகவும் மத்திய மாநில அரசுகளிடம் வழங்கி வருகிறார்.

உண்ணாவிரதம், போராட்டம், பஸ் மறியல் போன்ற செயல்களால் பொதுமக்கள்தான் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். தமிழ்நாட்டில் ஜல்லிகட்டு போராட்டத்தை தவிர மற்ற எந்த போராட்டத்திற்கும் நீதி கிடைக்கவில்லை. போராட்டம் செய்வதால் அதில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இல்லை.

சினேகன்

எங்களுக்கு பிரதமர் மோடியோ, முதலமைச்சர் ஈபிஎஸ் எதிரி இல்லை. மத்திய மாநில அரசுகள்தான் எதிரி. மக்களை எதிர்க்கும் எந்த அரசும் எங்களுக்கு எதிரிதான். வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் திமுகவுடன் கூட்டணி சேர்வது குறித்து காலம்தான் தீர்மானிக்கும். தமிழ்நாட்டில் கைது செய்ய வேண்டியவர்கள் நிறைய பேர் உள்ளனர். முதலில் லஞ்சம் வாங்கிய அரசியல்வாதிகளைத் தான் காவல்துறை கைது செய்யவேண்டும்" என்றார்.

Intro:தஞ்சாவூர் ஜு 03

உள்ளாட்சித்தோ்தலில் திமுகவுடன் கூட்டணி சேருவது குறித்து காலம் தான் தீர்மானிக்கும்
மக்கள் நீதி மைய மாநில செயற்குழு உறுப்பினர் கவிஞர் சினேகன் பேட்டி

Body:கும்பகோணத்தில் திருபுவனத்தில் நேற்று இரவு மக்கள் நீதி மைய சார்பில் நன்றி அறிவிப்பும், நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி கலந்து கொண்டு விட்டு, மக்கள் நீதி மைய மாநில செயற்குழு உறுப்பினர் கவிஞர் சினேகன் நிருபர்களிடம் கூறுகையில்,
கட்சி தொடங்கி 14 மாதங்களில் 16லட்சம் வாக்குகள் பெற்றுள்ளோம். காசு, இனாம் கொடுக்காமல் வாக்குகளை பெற்றுள்ளோம். தற்போது கட்சியில் உள்கட்டமைப்புகளில் மாற்றம் செய்ய வேண்டியுள்ளது. பிறகு உள்ளாட்சிதேர்தலில் போட்டியிடுவது குறித்து முடிவெடுப்போம்.
விவசாயம், விவசாயதொழிலாளர்கள் அழித்து வரும் எந்த திட்டத்தையும் எதிர்க்கின்றோம். விவசாய இடங்களை விட்டு, வேறு இடங்களில் இத்திட்டங்களுக்கு இடங்களை தேர்வு செய்து கொள்ள வேண்டும்.
விவசாயி, பொது மக்களின் வாழ்வாதாரத்தை அழித்து அந்த திட்டத்தை கொண்டு வர வேண்டிய அவசியம் இல்லை.
மீத்தேன், ஹைட்ரோகார்பன் போன்ற திட்டங்கள் குறித்து கட்சியின் தலைவர் கமலஹாசன், அறிக்கையாகவும்,கோரிக்கையாகவும் மத்திய மாநில அரசுகளிடம் வழங்கி வருகிறார்.
உண்ணாவிரதம், போராட்டம், பஸ் மறியல் போன்ற செயல்களால் பொது மக்கள் தான் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். இதற்கு நியாயம் கிடைக்காவிட்டால், போராட்டத்தில் ஈடுபடுவோம்.
தமிழகத்தில் ஜல்லிகட்டு போராட்டத்தை தவிர மற்ற எந்த போராட்டத்திற்கும் நீதிகிடைக்கவில்லை. போராட்டம் செய்வதால் அதில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இல்லை.
மீத்தேன், ஹைட்ரோகார்பன் துாத்துக்குடி பிரச்சனை தொடர்பாக மத்திய மாநில அரசுகளிடம் கோரிக்கை வழங்கி வருகின்றோம். எங்களுக்கு பிரதமர் மோடியோ, முதல்வர் ஈபிஎஸ் எதிரி இல்லை. மத்திய மாநில அரசுகள் தான் எதிரி. மக்களை எதிர்க்கும் எந்த அரசும் எங்களுக்கு எதிரிதான்.
வரும் உள்ளாட்சி தேர்தலில் திமுகவுடன் கூட்டணி சேர்வது குறித்து காலம் தான் தீர்மானிக்கும். அனைவரிடமும் கருத்து கேட்ட பிறகு முடிவு எடுக்கப்படும்.
தமிழகத்தில் கைதுசெய்ய வேண்டியவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். முதலில் லஞ்சம் வாங்கிய அரசியல்வாதிகளை போலீசார் கைது செய்வார்களா என்றார்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.