தஞ்சாவூர்: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் தலைமையில், விவசாய நிதிநிலை அறிக்கை தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று (ஜூலை 14) நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் சட்டப்பேரவை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
கரோனா தொற்றால் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர் உட்பட அனைவரும் முகக்கவசம் அணிந்திருந்த நிலையில், தஞ்சாவூர் சட்டப்பேரவை உறுப்பினர் நீலமேகம் மட்டும் முகக்கவசம் அணியாமல் கலந்து கொண்டார்.
மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொறுப்பில் உள்ள சட்டப்பேரவை உறுப்பினர் ஒருவரே முகக்கவசம் அணியாமல் இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: இந்தியாவில் 42 ஆயிரம் பேருக்கு கரோனா பாதிப்பு!